“உங்களுக்கு சின்ன பசங்களே பரவால்ல..!” – இம்ரான் தாஹிர் தென் ஆப்பிரிக்கா அணி மீது கடும் விமர்சனம்!

0
745
Tahir

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் லீக் சுற்றின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியது.

ஏனென்றால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்று பெரும்பான்மையான கிரிக்கெட் வல்லுனர்கள் கணிக்கவில்லை.

- Advertisement -

எல்லோருடைய கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டு லீக் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இன்று மழை மேகம் சூழ்ந்து இருந்த பொழுது டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது ஒரு தவறாக அமைந்தது. இன்னொரு பக்கம் 100% உடல் தகுதி இல்லை என்றாலும் விளையாட கேப்டன் தெம்பா பவுமா வந்தது இன்னொரு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் நான்கு பந்துகளை சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் டெம்பா பவுமா ஆட்டம் இழந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு சரிவை ஆரம்பித்து வைத்தார். இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை குறித்து, அந்த அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இம்ரான் தாஹிர் கூறும் பொழுது “நீங்கள் குழந்தையை போல விளையாடி இருக்கிறீர்கள். உங்களுக்கு நான்கு வருட ஒப்பந்தத்தில் பயிற்சியாளர்கள் இருந்தும் இப்படி இருக்கிறீர்கள். 40,000 பேர் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா சங்கடமாகிவிட்டது!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது குறித்து பேசிய இர்ஃபான் பதான் கூறுகையில் “டெம்பா பவுமா கேப்டனாக இல்லாவிட்டால், அவர் அணியில் செலக்ட் ஆவது மிகவும் கடினமான விஷயம். தென் ஆப்பிரிக்காவின் பிரச்சனை களத்திற்குள் மட்டும் இல்லை. களத்திற்கு வெளியே அதிகம் ஆனால் அது கிரிக்கெட் இல்லை. அது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை. இது குறித்து நாம் பேச முடியாது!” என்று கூறி இருக்கிறார்!