சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் மஸ்டர்ட் மற்றும் பெல் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனை அடுத்து கேப்டன் மார்கன் நிதானமாக விளையாடி 34 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆம்ப்ரோஸ் 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா மாஸ்டர் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ஹென்றி டேவிட்ஸ் மற்றும் தென்னாபிரிக்க ஜாம்பவான் ஹஷிம் அம்லாவும் விளையாடினர்.
41 வயதான ஹசீம் அம்லா ஏதோ சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இளம் வீரர்களுக்கு டஃப் கொடுப்பது போல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசிம் அம்லாவின் பேட்டிங்கை பார்த்து இந்திய ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர். 55 பந்துகளை எதிர்கொண்ட அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள் சேர்த்தார்.
இதில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அம்லாவின் ஸ்ட்ரைக்ரேட் 149 என்று அளவில் இருந்தது. கேப்டன் காலிஸ் 8 ரன்களில் வெளியேற ஆவிரோ பீட்டர்சன் 41 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஹசிம் அம்லாவுக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா மாஸ்டர் அணி 18 புள்ளி ஒரு ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஆஸி அணியை எதிர்கொள்ள என்ன ஸ்பெஷல் பிளான்.? எப்படி விளையாட போகிறோம்.. ரோகித் உடைக்கும் சீக்ரெட்
இதன் மூலம் நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர் அணி முதல் வெற்றியை பெற்றது. புள்ளி பட்டியலில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகள் உடன் இந்தியா மாஸ்டர்ஸ் அணி முதல் இடத்திலும், இலங்கை மாஸ்டர் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென்னாபிரிக்கா மாஸ்டர் 2 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியா மாஸ்டர் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் ஆகியோர் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி 2 இடத்திலும் இருக்கின்றன.