இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன் டிராபி தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் நாளை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா போட்டி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐசிசி தொடரில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. அதற்குப் பிறகு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய நிலையில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.
ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதைப் போலவே இந்த முறையும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்போடு ரோகித் சர்மா தலைமையிலான அணி களமிறங்குகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளையும் எப்படி எதிர்கொண்டோமோ அதே முறையில் தான் இந்த போட்டியையும் எதிர்கொள்ள போகிறோம், எனவே இது குறித்தும் அதிக அழுத்தும் கொள்ளக்கூடாது என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோகித் சர்மா பேட்டி
இது குறித்து ரோகித் சர்மா கூறும் போது ” பாருங்கள் ஆஸ்திரேலியா அணி ஒரு சிறந்த அணி. கடந்த மூன்று போட்டிகளில் நாங்கள் என்ன செய்ய நினைத்தோமோ அதே போலத்தான் இந்தப் போட்டியையும் அணுகப்போகிறோம் எங்களது அணுகு முறையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. மேலும் எதிர் அணி எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். நடுவில் சில பதட்டமான நேரங்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிங்க:நாட்டையே பெருமைப்படுத்திய ஒரு வீரரை.. இப்படி விமர்சிப்பது நல்லதல்ல.. ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் வீரர்
இப்போதெல்லாம் ஒரு ஆட்டம் அப்படித்தான் விளையாடப்படுகிறது. அரை இறுதி ஆட்டத்தை பற்றி கூற வேண்டும் என்றால், இந்த போட்டியில் இரண்டு அணிகளும் அழுத்தம் கொடுக்கும். ஒரு குழுவாக ஒரு வீரராக, ஒரு பேட்டிங் யூனிட்டாக, பவுலிங் யூனிட்டாக என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் கவனம் செலுத்துவது எங்களுக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும். ஆஸ்திரேலியா சிறந்த அணியாக இருக்கும்போது இந்த ஆட்டத்தில் சில பின்னடைவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருந்து செயல்பட போகிறோம்” என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.






