“ரொம்ப பெருமையா இருக்கு.. துபேவுக்கு ஒரு வேலை கொடுத்தேன்.. கச்சிதமா செஞ்சுட்டாரு” – ரோகித் சர்மா பேச்சு

0
1277
Rohit

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தற்பொழுது தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் கில் மற்றும் திலக் வர்மா நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டார்கள்.

- Advertisement -

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 20 ஓவர்களில் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரர் குல்பதின் நைப் 53 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா இந்த முறையும் ரன் எடுக்கவில்லை. விராட் கோலி 29 ரன்களை 16 பந்துகளில் எடுத்தார். அடுத்த ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஒட்டு மொத்தமாக அதிரடியாக விளையாடி போட்டியை முடித்து விட்டார்கள்.

இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடிய அதிரடியாக அரை சதங்களை கடந்த உடன் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் மூலம் வெகு எளிதாக வெற்றி இந்திய அணியின் கைகளுக்கு வந்து விட்டது. 15.4 ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்பொழுது “இந்திய டி20 அணியில் 2007 ஆம் ஆண்டு இணைந்து இன்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஒரு பெருமைமிக்க நீண்ட பயணம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் எதை சாதிக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்.

நீங்கள் இதை மிகப்பெருமையாக உணரலாம். அதைப் பற்றி பேசுவதற்கும் அதையே போய் களத்தில் செய்வதும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. கிட்டத்தட்ட நாங்கள் எல்லா பாக்ஸையும் டிக் செய்து இருக்கிறோம்.

ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவரும் இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியில் பெற்ற வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி இருக்கிறார்.

இதேபோல் சிவம் துபேவும் நன்றாக விளையாடு வருகிறார். அவரால் சுழற் பந்துவீச்சாளர்களை மிக நன்றாக அடித்து விளையாட முடியும். அவருக்கு நாங்கள் அந்த வேலையைத்தான் கொடுத்தோம். அவர் அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். எங்களுக்காக அவர் இரண்டு சிறப்பு இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்!