ஈடன் கார்டனில் ‘ரஸ்ஸல்.. ரஸ்ஸல்’ என்று கத்தி தான் கேட்ருக்கேன்; இப்போ ‘ரிங்கு.. ரிங்கு’ என்று கத்த வச்சிட்டாரு – நிதிஷ் ராணா பேட்டி!

0
1335

ஈடன் கார்டனில் பலமுறை ரஸ்ஸலுக்காக கத்தி கேட்டிருக்கிறேன். இப்போது ‘ரிங்கு.. ரிங்கு’ என்று கத்தும் அளவிற்கு அவர் தன்னை வளர்த்துக்கொண்டார் என பெருமிதமாக பேசியுள்ளார் நிதிஷ் ராணா.

ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது.

- Advertisement -

180 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் நித்திஷ் ராணா இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஆனால் இவர்களால் கடைசி வரை நின்று பினிஷ் செய்து கொடுக்க முடியாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.

கடைசியில் வந்த ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று பினிஷ் செய்து கொடுத்தனர். இதில் ரஸ்ஸல் 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரிங்கு சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவர் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை அடித்து போட்டியை கொல்கத்தா அணிக்காக மீண்டும் ஒருமுறை அபாரமாக ஃபினிஷ் செய்து கொடுத்தார் ரிங்கு சிங்.

- Advertisement -

கடைசி ஓவர் கடைசி பந்தில் வெற்றி பெற்ற பிறகு, கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ரானா பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“நான் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு விக்கெட் விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். வெங்கடேஷ் ஐயருக்கு காலில் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் அவர் நேரம் எடுத்துக்கொள்ளட்டும், நான் ஒரு சில ஓவர்கள் பெரிய ஓவர்களாக மாற்ற வேண்டும் என்று அதிரடியாக விளையாட முற்பட்டேன். இதுதான் என்னுடைய அணுகுமுறைக்கு காரணம்.

கிட்டத்தட்ட 10 போட்டிகளாக ரஸ்ஸல் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் அவரை தொடர்ந்து அணியில் வைத்திருந்ததற்கு காரணம், அவரிடமிருந்து ஒரு போட்டி அதிரடியாக வந்து விட்டால் ஆட்டம் மொத்தமாக மாறிவிடும். அவரும் பார்மிற்கு வந்து விடுவார் என்று எண்ணினேன். இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

ரஸ்ஸல் பார்மில் வருவதற்கு திணறுகிறார். சரியாக பினிஷ் செய்ய முடியவில்லை என்றால் ரிங்கு சிங் அந்த ரோலுக்கு சரியாக இருப்பார். இறங்கிய முதல் பந்தில் இருந்தே அடிக்கக்கூடிய திறமை பெற்றவர் என்பதால், அவரை சீசனின் ஆரம்பத்தில் இருந்தே பினிஷிங் ரோலில் இறங்க வைக்கலாம் என்று அணி நிர்வாகத்திடம் ஆலோசித்து முடிவு செய்தோம்.

இந்த போட்டியில் 160-165 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். டெத் ஓவரில் பவுலர்கள் படுமோசமாக செயல்பட்டதால் அவர்கள் மீது எனக்கு கோபம் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் விரத்தியுடன் காணப்பட்டேன்.

இந்த சீசன் துவக்கத்திலேயே ரிங்கு சிங் இடம், ‘என்னுடைய திட்டத்தில் நீ இருக்கிறாய்! உன்னை நீ முழுமையாக நம்பு உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்றேன்.’ மேலும் 5 சிக்ஸர்கள் அடித்த பிறகும், ‘பல வீரர்கள் செய்ய முடியாததை நீ செய்து காட்டினாய். ஆகையால் நீ உன்னை நம்பி, தொடர்ந்து இதே ஆட்டத்தை வெளிப்படுத்து.’ என்றும் கூறினேன். சமீபகாலமாக அவர் செயல்பட்டு வரும் விதம் மிகுந்த பெருமையாக இருக்கிறது.

ரிங்கு சிங் பேட்டிங் செய்யும் பொழுது மைதானத்தில் ரசிகர்கள் ‘ரிங்கு.. ரிங்கு’ என்று கரகோஷம் எழுப்பினர். இதை அவர் தனது சொந்த ஆட்டத்தின் மூலம் சம்பாதித்து இருக்கிறார். நான் பல வருடங்களாக கொல்கத்தா அணியில் இருந்து வருகிறேன். ஈடன் கார்டனில் ரசிகர்கள் ‘ரஸ்ஸல்..ரஸ்ஸல்’ என்று கரகோஷம் எழுப்பி கேட்டிருக்கிறேன். இப்போது ‘ரிங்கு.. ரிங்கு’ என்று கரகோஷம் எழுப்புகிறார்கள். இது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. இந்த சீசனில் அபாரமான ஆட்டத்தின் மூலம் இப்பேர்ப்பட்ட மரியாதையை அவர் ரசிகர்களிடமிருந்து பெற்று இருக்கிறார்.” என்றார் ராணா.