“உண்மைய சொல்றேன் எதுவும் நல்லால்ல.. அது கேப்டனின் பர்சனல்!” – ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா வெளிப்படையான பேச்சு!

0
852
Zamba

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கக் கூடிய விஷயம் சுழற் பந்துவீச்சு!

காரணம் அந்த அணியில் பிரதான முழுமையான சுழற் பந்துவீச்சாளராக வலது கை மணிக்கட்டு பந்துவீச்சாளர் ஆட்டம் ஜாம்பா மட்டுமே இருக்கிறார். அவருடன் பகுதி நேர பந்துவீச்சாளராக மேக்ஸ்வெல் இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகின்ற காரணத்தினாலும், மேலும் உலகக்கோப்பைத் தொடர் என்பதாலும், எல்லா அணியிலுமே இரண்டு முழுமையான சுழற் பந்துவீச்சாளர்கள் கட்டாயம் அவசியம். ஆஸ்டன் அகர் கிடைக்காத காரணத்தினால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியே!

இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக ஆடம் ஜாம்பா பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்து வீச, இவரோ மிகத் தடுமாற்றமாக இருந்தார். இவரால் இவருடைய திறமைக்கு தகுந்தபடி விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை.

இந்த நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிராக மீண்டும் தன்னுடைய பழைய பந்துவீச்சு ஃபார்முக்கு திரும்ப வந்திருக்கிறார். இன்று 8 ஓவர்கள் பந்துவீசி, ஒரு மெய்டன் செய்து, 47 ரன்கள் விட்டுத்தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இவர் சென்றிருக்கலாம். ஆனால் கேப்டன் கம்மின்ஸ் இவரை மேற்கொண்டு விக்கெட் எடுத்தும் பந்து வீச அனுமதிக்கவில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஆடம் ஜாம்பா பேசும்பொழுது “உண்மையைச் சொல்வது என்றால்,பெரிதாக எதையும் உணரவில்லை. இன்று நான் ஓரளவுக்கு பந்துவீசி இருக்கலாம். இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்ததால் மேற்கொண்டு மேக்ஸ்வெல்லை பந்து வீச வைத்திருக்கலாம்.அது கேப்டனின் பர்சனல் முடிவு.

கடந்த ஆட்டங்களில் நான் சிறப்பாக பந்து வீசவில்லை. என்னால் சிறப்பாக செயல்பட முடியும். இன்று சிறந்த முடிவில் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். நான் விக்கெட் எடுக்கும் மனப்பான்மையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். பெங்களூரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எங்களுக்கு பெரிய போட்டி இருக்கிறது. அது மிகவும் முக்கியமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!