“இங்கிலாந்து பண்ணத நினைச்சா ஆச்சரியமா இருக்கு.. ரொம்ப நல்லது பண்ணிட்டாங்க!” – தென் ஆப்பிரிக்க கேப்டன் பிரமிப்பான பேச்சு!

0
776
Markram

இன்று இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறது.

முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளாஸ் அண்ட் மார்க்கோ யான்சன் அதிரடியில் மிரட்டினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு கடைசியில் வந்த மார்க் வுட் 43 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்சம். இதற்கு அடுத்து இன்னொரு பந்துவீச்சாளர் அட்கிஸ்டன் 35 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணியை தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருட்டினார்கள். தற்பொழுது 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ள இங்கிலாந்து அணியின் ரன் ரேட் மிகவும் பாதாளத்தில் இருக்கிறது. எனவே அரை இறுதி வாய்ப்பும் சந்தேகமாக இருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் பலமான அணியாக உள்ளே வந்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது. இதுவே அதிர்ச்சி என்று இருந்த நிலையில், அடுத்து ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்று பேரதிர்ச்சியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் ” அற்புதமான ஆல்ரவுண்ட் செயல் திறன். இதற்கு மேல் எங்கள் வீரர்களிடம் பெரிதாக எதையும் கேட்க முடியாது. எடுத்த முயற்சிக்கு மிக்க மகிழ்ச்சி.

இதில் சற்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் டாசில் வெற்றி பெற்று இருந்தால் முதலில் பேட்டிங்தான் செய்திருப்போம். நல்ல வேலையாக எங்களது வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த வெயிலில் முதலில் மாட்டவில்லை.

எங்களது அணியின் ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் மார்க்கோ யான்சன் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். அவர்களது நம்பிக்கை உயர்ந்திருக்கும். பேட்டிங்கில் ஐந்தாம் இடத்தில் கிளாசின் மற்றும் ஆறாம் இடத்தில் டேவிட் மில்லர், இவர்கள் இருவரும் அழிவுகரமான ஜோடி. நெதர்லாந்து அணிகூட நான் தோல்விக்கு பிறகு மீண்டு வருவதற்கு இது சிறந்த வெற்றி!” என்று குறிப்பிட்டிருக்கிறார்!

போட்டி நடைபெற்ற மும்பை மைதானம் கடலை ஒட்டி இருக்கின்ற காரணத்தினால், காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக வீரர்கள் மிக எளிதாக களைப்படைவார்கள். எனவே பனிப்பழிவை பற்றி கவலைப்படாமல் பேட்டிங்கை தேர்ந்தெடுப்பதுதான் சரியான ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!