இப்ப வரை இந்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியும்னு உறுதியா நம்பறேன் – சஞ்சு சாம்சன் பெரிய ஏமாற்றம்!

0
163
Sanju samson

இன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பவர் பிளேவில் 37 ரன்கள் எடுத்து, 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 79 ரன்கள் எடுத்து, 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்த இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 11.3 ஓவரில் 87 ரன்கள் கிடைத்தது. ஆனால் பத்து ஓவர்களுக்குப் பிறகு சரியாக விளையாடாமல் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவை என்று நிலைமையைக் கொண்டு வந்து, இறுதி ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் தாழ்வான உயரத்தில் வரும்படி இருந்தது. ஆனால் இலக்கை நோக்கி விக்கட்டுகளை கையில் வைத்திருந்த ராஜஸ்தான் அணி தைரியமாக பத்து ஓவர்கள் கழித்து விளையாடி இருந்தால் ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி விளையாடாததால் அதீத நம்பிக்கையால் ராஜஸ்தான் அணி தோற்றுப் போனது.

தோல்விக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன்
” உண்மையில் இந்த தோல்வி நன்றாக இல்லை. ஆனால் நாம் இதிலிருந்து பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து போக வேண்டும். எங்களிடம் இருக்கும் பேட்டிங் வரிசைக்கு இது சேசிங் செய்யக்கூடிய இலக்குதான். அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். நிலைமைகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இது ஒரு சேசிங் ஸ்கோர் என்று நான் இப்பொழுது வரை நம்புகிறேன்!” என்று கூறியிருந்தார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் இதைப் போல ஒரு ஆடுகளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதில் பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக கிடைத்தது. நாங்கள் புத்திசாலித்தனமான கிரிக்கெட் விளையாட வேண்டும். சுமார் ஒன்பது பத்து ஓவர்கள் வரை நாங்கள் நன்றாகவே சென்று கொண்டிருந்தோம். பின்னர் நாங்கள் அதற்கு அடுத்து ஒரு பெரிய ஓவரை மாற்றாமல் விட்டு விட்டோம். அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். நாங்கள் கடினமாக அடிக்க போகும் பொழுது விக்கட்டுகளை இழந்தோம். பொதுவாக நாம் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆட்டத்திலிருந்து ஒன்றைக் கற்றுக் கொண்டு அடுத்து போக வேண்டும். அவர்களை இந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் இந்த ஆட்டத்தில் இருந்து ஒன்றை கற்றுக் கொண்டோம்!” என்று கூறியிருக்கிறார்!