எல்லாக் காலத்திலும் சிறந்த வீரன் நான் கிடையாது இவர்கள் இருவர் தான் – விராட் கோலி வெளிப்படையான பேச்சு!

0
1142
Viratkohli

தற்போதைய நவீன கிரிக்கெட் காலத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மிகப்பெரிய பேட்ஸ்மேன் என்றால் அது இந்தியாவின் விராட் கோலிதான்!

ஆனால் இப்படிப்பட்ட பெரும் பேருடைய விராட் கோலிக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் மிகச் சரியாக அமையவில்லை. அவரது பேட்டில் இருந்து சதங்கள் வராமல் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார், பின்பு அரை சதங்கள் வருவது குறைந்தது, இதற்கு அடுத்து மிகப்பெரிய பின்னடைவாக இந்த வருட ஐபிஎல் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து விராட் கோலி இந்திய டி20 அணியில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்கிற அளவுக்கு எல்லாம் முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதங்கள் கிளம்பியது. இதற்கு நடுவில் இங்கிலாந்து சென்ற விராட் கோலி நான்கு இன்னிங்ஸ்களில் மிக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அவருக்கு ஒரு மாத காலம் ஓய்வு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பி வந்த விராட் கோலி முதலில் பாகிஸ்தான் அணி உடன் ஒரு 30 ரன்கள் எடுத்து கொஞ்சம் தடுமாற்றம் இல்லாமல். பிறகு ஹாங்காங் அணியுடன் ஒரு அரை சதம் அடித்தார். இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணி உடன் ஒரு சதம் வர, மொத்தமாய் எல்லாம் மாறிப்போனது.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக உயர் அழுத்த போட்டியில் இறுதி வரை களத்தில் நின்று 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இது அவரது மிகச் சிறந்த தனிப்பட்ட ஆட்டமாக மட்டுமல்லாமல் மொத்த டி20 போட்டிகளிலும் மிகச் சிறந்த ஆட்டமாக பதிவாகி இருக்கிறது.

இதனால் விராட் கோலியை ஜி ஓ ஏ டி அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதன் சுருக்கமாக கோட் என்று ரசிகர்கள் மிக அதிக அளவில் அழைக்க ஆரம்பித்தார்கள். இதுகுறித்து விராட் கோலி இடம் கேள்வி ஒன்று முன் வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விராட் கோலி “நான் என்னை எல்லா காலகட்டத்திலும் மிகச் சிறந்த வீரராக நினைக்கவில்லை. என்னை பொருத்த வரையில் இதற்கு தகுதியான இரண்டு பேர் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் மற்றொருவர் விவியன் ரிச்சர்ட்ஸ் ” என்று கூறியிருக்கிறார்!