“நான் ஒன்னும் நிபுணன் கிடையாது.. எல்லா அப்பப்ப பார்த்தாதான் தெரியும்!” – ராகுல் டிராவிட் அதிரடியான பேச்சு!

0
1844
Dravid

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக செப்டம்பர் 27ஆம் தேதி இன்று கடைசி நாளாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது மாற்றம் செய்யப்பட்ட அணிகளை இன்று அறிவிக்கும் என்பது உறுதி. இரு அணிகளின் ரசிகர்களுமே அதற்காக காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தரப்பை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை அணியில் மாற்றம் இருக்கும் என்று கூறலாம். ஏனென்றால் முன்பு மார்னஸ் லபுசேன் இல்லை. தற்பொழுது அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் அவரது தேவை இருக்கிறது. எனவே மாற்றம் இருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அக்சர் பட்டேல் காயம் சரியாக விட்டால் நிச்சயம் மாற்றம் வருவது உறுதி. அதே சமயத்தில் சர்துல் தாக்கூர் இடத்தில் அஸ்வின் அல்லது மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கவும் செய்கிறது.

நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் மிக வலிமையான அணிகளாக கணிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று தங்களது அணிகளை இறுதி செய்யும் என்கின்ற காரணத்தினால், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசிய பொழுது “இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமி தேர்வாளர்களுடன் தொடர்பில் உள்ளது. அஜித் அகர்கர் உடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நீங்கள் அதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்வீர்கள். தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை.

போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் பற்றி கேட்டீர்கள் என்றால், இந்தியா மிகப்பெரிய நாடு. மேலும் இங்கு பல மைதானங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்வது கடினம். ஒவ்வொரு இடமும் வித்தியாசமானதாக இருக்கும்.

இது உண்மையில் கணிப்பதற்கு கடினமான விஷயம். ஒரு சில நாட்களில் நாங்கள் பயிற்சியின் போது பார்க்கும் பொழுது மைதானம் பனியால் நடைபெறும். அதே போட்டி நாளில் மைதானத்தில் பனி இருக்காது. மேகங்கள் வரும் பொழுது பணி குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

நான் உண்மையில் ஒரு நிபுணன் கிடையாது, நாம் சில சமயங்களில் இதை தவறாகவே புரிந்து கொள்வோம். ஆனால் நிச்சயமாக தொடர் தொடர்ந்து நடக்கும் பொழுது பனி சில இடங்களில் முக்கியமான காரணியாக இருக்கும். சில இடங்களில் இல்லாமல் போகலாம். இது இன்னும் சுவாரசியமான ஒன்று மேலும் கணிப்பதற்கு கடினமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!