“நான் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டி இல்லை” – யார் இந்த ஐபிஎல் விளையாடாத ஆச்சரியமான ஆல்ரவுண்டர்?!

0
1909
Atit Seth

இந்திய கிரிக்கெட்டில் தற்பொழுது திறமையான இளம் வீரர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஒருபுறம் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட்டில் நிலைமை இப்படி ஆரோக்கியமாக இருந்தாலும், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கின்ற அடிப்படையில் சமீபத்தில் சர்துல் தாக்கூருக்கு பிறகு யாரும் சொல்லிக் கொள்கிற அளவில் வரவில்லை.

- Advertisement -

உலக கிரிக்கெட்டிலும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைப்பது என்பது பெரிய கடினமான சூழ்நிலையாகவே இருக்கிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு கேமரூன் கிரீன் அப்படி கிடைத்திருக்கிறார்.

இந்திய அணிக்கு தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு நம்பிக்கையான வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயத்தில் இதற்கு மாற்றாக தற்பொழுது பரோடா மாநில அணிக்காக விளையாடும், ஆனால் ஐபிஎல் அணிக்காக விளையாடும் அதித் சேத் என்ற வலது கை இளம் வீரர் கிடைத்திருக்கிறார்.

உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் மற்றும் ஏழு அரை சதங்கள் அடித்துள்ள இவர் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கட்டுகளை மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கைப்பற்றி இருக்கிறார். ஆனாலும் இவருக்கு ஐபிஎல் தொடரில் பெரிதான வரவேற்பு இல்லை. இவர் யாரும் வாங்கவும் இல்லை.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இவர்
“நான் ஹர்திக் பாண்டியா அல்லது சர்துல் தாக்கூர் மற்றும் யாருடனும் போட்டியிடவில்லை. ஒவ்வொரு வீரரையும் ஒரு குறிப்பிட்ட திறமையின் பாத்திரமாக நான் உணர்கிறேன். உள்நாட்டு தொடர்களில் வரவிருக்கும் தொடர்களில் நான் சிறந்த ஆட்டத்தை வழங்குவது எனக்கான போட்டியாகும்.

ஐபிஎல் தொடரில் நான் தேர்வாக, இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடரில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒரே வடிவத்தில் ஆனவை. கடந்த ஆண்டு நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளின் பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் எனக்கு இந்திய ஏ அணியில் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் இருந்ததால் செல்ல முடியவில்லை.

இரானி டிராபியில் எனது பெயர் வந்தால் நன்றாக இருக்கும். நான் நன்றாக செயல்பட வேண்டும். ஜனவரியில் இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும். அதிலும் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது என் இலக்கு. நான் இதுவரை ஒரு சுற்றுப்பயணம் செய்துள்ளேன். மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் அது அங்குள்ள நிலைமைகளைப் பழகுவதற்கு உதவும். பின்னர் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்?

நான் பரோடாவுக்காக விளையாடிய விளையாடும் முனாப் படேல் பாய், இர்பான் மற்றும் ஹர்திக் பாண்டியா பாய் ஆகியோரை சந்திக்கும் போதெல்லாம் எனது ஆட்டம் மேம்படுவதற்கான யோசனைகளை நான் எப்பொழுதும் கேட்பேன். அதனால் அவர்கள் பரோடாவில் இருக்கும் பொழுதெல்லாம் நான் அவர்களிடம் நேரில் சென்று ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!