“இந்திய பங்களாதேஷ் போட்டியை புறக்கணிக்கிறேன்” – பாகிஸ்தான் பிரபலம் சர்ச்சை முடிவு.. ரசிகர்கள் கிண்டல்.!

0
7234

இந்தியாவில் தற்போது 13 வது உலகக் கோப்பை தொடர் நடை பெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் 16 போட்டிகள் முடிவுற்ற நிலையில் நியூசிலாந்து அணி நான்கு வெற்றிகள் உடன் முதலிடத்திலும் இந்தியா மூன்று வெற்றிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு வெற்றிகள் உடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் 17 வது போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைத்து நடைபெற உள்ளது . இந்தப் போட்டிக்காக இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தப் போட்டியில் விளையாட இருப்பதால் நிச்சயமாக இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியா இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை அபாரமாக வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கி இருக்கிறது. இந்திய அணியும் மிகவும் வலுவாக இருப்பதால் இந்த முறை நிச்சயமாக இந்தியா வெற்றி பெறும் என்று கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்த்த சமூக வலைதள பிரபலமும் விளையாட்டு பத்திரிகையாளருமான பரீத் கான் என்பவர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியை புறக்கணிக்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஐசிசி மற்றும் பிசிசிஐ பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தலை பட்சமாக செயல்படுவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான அவரது பதிவால் சமூக வலைதளங்களில் வைரலாகி இருப்பதோடு நகைச்சுவையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர்” நாளை நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியை தான் புறக்கணிக்க இருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக எந்த பதிவுகளையும் ட்விட்டர் வலைதளங்களில் நாளை பதிவு செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட இந்திய ரசிகர்கள் இந்தப் போட்டியை புறக்கணிக்க வேண்டாம் என்றும் இதனால் இந்த போட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகாது என தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் தன்னைப் பொறுத்தவரை சமூக வலைதளங்களில் கிடைக்கும் வருமானத்தை விட தனது நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியம் என பதிவு செய்திருக்கிறார். 29 நாட்கள் வருமானம் ஈட்டும் நான் ஒரு நாள் வருமானத்தை கைவிடுவதால் பெரிதாக எதுவும் நடக்காது எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இதனை தன்னாட்டு மக்களுக்காகவும் பாகிஸ்தானுக்காகவும் செய்வதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்திய அணியின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவர் கிரிக்கெட் ஆர் பிளஸ் மற்றும் கிரிக் டென் ஆகிய செய்தி நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது . அனைவரும் இந்த பதிவை கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.