எனக்கு இதெல்லாம் சந்தோஷம்தான்.. நோக்கம் நல்ல அறிகுறியை பார்த்தேன் – வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. டிராவிட் கருத்து!

0
200
Dravid

இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று பரிதாபமாக நாடு திரும்பி இருக்கிறது!

ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு நேராக அங்கிருந்து இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாடி தோற்று நாடு திரும்பிய இந்திய அணி ஒருமாத காலம் ஓய்வில் இருந்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையை வைத்துக்கொண்டு, அதற்கு அணியை தயார்படுத்தும் விதமாக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது இந்திய அணி!

இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை மற்றும் முழுமையாக ரோகித் சர்மா தலைமையில் சந்தித்து ஒன்றுக்கு பூஜ்ஜியம் எனக் கைப்பற்றியது. இதற்கு அடுத்து முன்னணி வீரர்கள் ஓய்வெடுக்க இளம் வீரர்களுக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு தரப்பட்டு இரண்டுக்கு ஒன்று எனத் தொடர் கைப்பற்றப்பட்டது. இதற்கு அடுத்து நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு மூன்று என இந்திய அணி இழந்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், திலக் வர்மா மூவரும் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு கிடைத்த நேர்மறையான விஷயங்கள் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்தத் தொடரில் எங்களுக்கு அறிமுகமான மூன்று இளம் வீரர்களுமே எழுந்து நின்றார்கள் என்று நான் நினைக்கிறேன். நான்காவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். அவரால் என்ன முடியும்? என்று ஐபிஎல் தொடரில் காட்டினார். அதை சர்வதேச அளவிலும் கொண்டு வந்து பிரதிபலிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

திலக் வர்மா உள்ளே வருவது மிகவும் நல்லது என்று நினைத்தேன். அவர் சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய வந்தார். அவர் நிறைய உள்நோக்கம் கொண்டு விளையாடுகிறார். மேலும் பாசிட்டிவாகவும் விளையாடுகிறார். ஆட்டத்தை நகர்த்திச் செல்கிறார். தொடர் முழுவதும் அற்புதமாக இருந்தார். அவரால் அணிக்கு ஒன்று இரண்டு ஓவர்களை வீச முடியும் என்றும் காட்டினார். மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது நாம் எதிர்த்து விளையாடும் தாக்குதல்களுக்கு எதிராக சிறப்பான ஒன்றாக இருக்கும்.

முகேஷ் குமாரும் இந்த தொடரில் அறிமுகமானார். அவர் தன்னை மிக நன்றாக விடுவித்துக் கொண்டார். டி20 போட்டியில் பெரிய ஹிட்டர்களுக்கு எதிராக இறுதிக் கட்டத்தின் போது அவர் பந்து வீச அழைக்கப்பட்டார். அப்போதும் அவரது பந்துவீச்சு மிக நன்றாக இருந்தது. எனவே எங்களுக்காக இந்த தொடரில் அறிமுகமான வீரர்களிடம் நல்ல நேர்மறையான அம்சங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன். அயர்லாந்து டி20 தொடரில் இன்னும் சில வாய்ப்புகளைப் பெற்று, நம்பிக்கையோடு விளையாடி தங்களை மேலும் நிரூபிப்பார்கள்!” என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்!