“நான் ஒரு முட்டாள்.. ஐபிஎல் இந்திய ரசிகர்கள தப்பா சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க!” – ஹாரி புரூக் மனம் திறந்த வருத்தம்!

0
199
Brook

தற்போது 24 வயதாகும் இளம் வலது கை பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் ஹாரி புரூக், உலக கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் பெரிய நட்சத்திர வீரராக வருவார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய நான்கு சதங்கள் அடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இதன் காரணமாக இவரால் அடுத்த விராட் கோலியாகவும் வரமுடியும் என்று ஸ்டோக்ஸ் கூறி இருந்தார்.

- Advertisement -

ஆனால் இவருக்கு இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் சரியாக அமையவில்லை. தற்போது இவர் இங்கிலாந்து அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

இதற்கு நடுவில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஏற்கனவே நடைபெற்ற முடிந்த மினி ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை 13.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இது குறித்து அப்போது இவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

அதற்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்ற பொழுது இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் ஒரு சதம் அடித்தார். வாய்ப்பு கிடைத்த வேறு எந்த போட்டியிலும் இவரால் நல்ல முறையில் விளையாடி அணிக்கு தாக்கத்தை கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

மோசமான ஐபிஎல் தொடரைக் கொண்டிருந்த இவர் கொல்கத்தா அணிக்கு எதிராக சதம் அடித்ததும், தன்னைக் குறித்து பேசி வந்த ஐபிஎல் இந்திய ரசிகர்களின் வாயை மூட வைத்து விட்டதாக பேசியிருந்தார். இது அப்போதே பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் இவர் சரியாக விளையாடாமல் போக, விமர்சனம் இன்னும் அதிகமானது.

இந்த நிலையில் தற்போது அது குறித்து பேசி உள்ள ஹாரி புரூக் “நான் ஒரு முட்டாள். முட்டாள்தனமான அப்படி ஒரு கருத்தை கூறி விட்டேன். நான் இதற்காக தற்பொழுது வருத்தப்படுகிறேன். இந்தியாவில் நீங்கள் ஒரு வீரராக பெரும்பாலும் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து விடுகிறீர்கள். இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் நீங்கள் செயல்பட ஆரம்பிக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் பார்க்க விரும்பாத விஷயங்கள் எல்லாம் உங்கள் கண்ணில் படுகிறது.

நான் சமூக வலைதளங்களில் இருந்து வெளியில் வருவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தேன். இனிமேல் சமூக வலைதளங்களில் நிறைய நேரத்தை செலவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். இப்பொழுது என்னுடைய சமூக வலைதள கணக்குகளை இயக்குவதற்கான பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!