“அவர் என்னை கூப்பிட்டு பாராட்டினதை மறக்கவே முடியாது!” – பங்களாதேஷ் சாதனை வீரர் நெகிழ்ச்சி!

0
2922

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியானது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  இன்றைய  நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில்  பங்களாதேஷ்  அணி  272 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை  இழந்துள்ளது.மீதம் நான்கு விக்கெட் கையில் இருக்கும் நிலையில்  இன்னும் 241 ரன்கள் எடுத்தால்  மட்டுமே வெற்றி பெற முடியும். நாளை ஒரு நாள் ஆட்டம் முழுவதுமாக இருப்பதால்  இந்திய அணிக்கு தான்  வெற்றி வாய்ப்பு  அதிகமாக உள்ளது.

நான்காம் நாள் ஆட்டமான இன்று  விக்கெட் இழப்பின்றி  ஆட்டத்தை  துவக்கிய  பங்களாதேஷ் அணி  மிகச் சிறப்பாக ஆடியது . பங்களாதேஷ் அணியின்  துவக்க  ஆட்டக்காரர்கள்  ‘நஜ்முல்  உசைன்’  ‘சாண்டோ’  மற்றும்  ‘ஜாகிர்  ஹசன்’  ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 176 ரன்கள் சேர்த்தனர்.உணவு இடைவேளைக்குப் பின் ‘உமேஷ் யாதவ்’ பந்துவீச்சில்  ‘சாண்டோ’ ஆட்டமிருந்தார் .

ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய  மற்றொரு துவக்காட்டக்காரர் ‘ஜாஹீர் ஹசன்’  டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் . பங்களாதேஷ் அணிக்காக  அறிமுக போட்டியிலேயே சதம் அடிக்கும்  முதல் துவக்க வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் t20 ஸ்பெசலிஸ்ட் ஆக அறியப்பட்ட இவர்  டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியது  அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது .

இந்நிலையில் தனது சதத்தை நிறைவு செய்த ‘ஜாஹீர் ஹசன்’ ,’அஸ்வின்’ பந்துவீச்சில் ‘விராட் கோலி’ யிடம் ‘கேட்ச்’ கொடுத்து ஆட்டம் இழந்தார் . இவரது கேட்சை பிடித்த பின்  ‘பெவிலியனுக்கு’ திரும்பிய  ‘ஜாகிர்  ஹசனை’ தட்டிக் கொடுத்து பாராட்டினார் ‘விராட் கோலி’  மேலும் அவரிடம் ஒரு சில வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார் .

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்  ஜாகிர் ஹசனிடம்   கேட்கப்பட்ட போது,” நான் ஆட்டமிழந்து திரும்பும் போது  விராட் கோலி  என்னை தட்டிக் கொடுத்து பாராட்டினார் ” நீ நன்றாக விளையாடினாய், இதே போல் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும்”என்று  தன்னிடம் கூறியதாக தெரிவித்தார் .

மேலும் பேசிய  ஜாகிர் ஹசன் “இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும்  முன்னணி   பேட்ஸ்மேன் ஆன  ‘ராகுல் டிராவிட்’  பாராட்டியதை  என்னால் மறக்க முடியாது . ஒரு பிரியாணியின்🌹 பயிற்சியாளர் மற்றும்  கிரிக்கெட்டின் ‘லெஜன்ட்’  என்னை அழைத்து பாராட்டியது  என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று” என்று கூறினார்.