“என் டீமுக்காக எது வேணாலும் செய்வேன்.. பென்ச்சில் இருக்கிறது பிரச்சனையே கிடையாது!” – ஆட்டநாயகன் முகமது சமி அசத்தலான பேச்சு!

0
2935
Shami

இந்தியா அணி இன்று உலகக்கோப்பையில் தன்னுடைய ஐந்தாவது ஆட்டத்தில் தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்து அணியை சந்தித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று தொடர்ச்சியாக தன்னுடைய ஐந்தாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியதோடு, அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்திருக்கிறது.

இன்று முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் சமி இருவரும் வீழ்த்தினார்கள்.

மூன்றாவது விக்கெட்டுக்கு சமி உருவாக்கிய கேட்ச் வாய்ப்பை ஜடேஜா அதிர்ச்சிகரமாக தவறவிட்டார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 300 ரன்கள் தாண்டி அடிப்பது போல் இருந்தது.

- Advertisement -

ஆனால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்த இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டின் மூலமாக அவர்களை 273 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள். இதில் இன்று வாய்ப்பு பெற்ற முகமது சமியின் பங்கு மிகப் பெரியதாக இருந்தது.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்தராவை வீழ்த்தி 151 ரன் பார்ட்னர்ஷிப்புக்கு முடிவு கட்டினார். இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் மேற்கொண்டு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தை தடுத்தார்.

இன்றைய போட்டியில் முகமது சாமி மொத்தமாக 10 ஓவர்கள் பந்துவீசி 54 ரன்கள் விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். உலகக் கோப்பையில் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஒரே இந்திய பந்துவீச்சாளராக சமி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறும் பொழுது “நீண்ட காலத்திற்குப் பிறகு விளையாடும் வாய்ப்பை பெறும் பொழுது, நீங்கள் முன்கூட்டியே ஆட்டத்தில் நம்பிக்கையை பெறுவது முக்கியம். எனக்கு இந்த போட்டியில் முன்கூட்டியே நம்பிக்கை கிடைத்தது.

உங்களுடைய அணி சிறப்பாக செயல்படுகிறது என்றால் நீங்கள் வெளியில் இருப்பது பிரச்சினையே கிடையாது. அவர்கள் உங்கள் அணியினர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் நீங்கள் ஆதரிக்க வேண்டியது உங்கள் கடமை.

இதில் அணியின் நலன் இருக்கிறது என்கின்ற காரணத்தினால் எதுவுமே பிரச்சினை கிடையாது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்ற நாங்கள் மோதிக் கொள்வதால் இந்த போட்டியில் விக்கெட் எடுப்பது மிகவும் அவசியமாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!