“கோப்பையை கைப்பற்றாதது வேதனை தான் என்றாலும் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் ஆடிய விதத்தை பாராட்ட வேண்டும்” – இறுதிப் போட்டிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

0
689

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது

முன்னதாக 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா நான்காம் நாள் ஆட்டத்தை 164 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் முடித்தது. விராட் கோலி மற்றும் அஜின்கியா ரகானே களத்தில் இருந்ததால் நிச்சயமாக இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது .

- Advertisement -

இன்றைய நாள் ஆட்டத்தில் 280 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரகானே பொறுமையாகவே ஆட்டத்தை துவங்கினர் . ஆயினும் துரதிஷ்டவசமாக விராட் கோலி 49 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையும் சரிந்தது . இதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. கடந்த முறை நியூசிலாந்து அணி இடம் தோல்வியை தழுவிய இந்தியா இந்த முறை ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது . கடந்த பத்து வருடங்களில் ஐசிசி கோப்பை காண இறுதிப் போட்டியில் இந்திய அணி சந்திக்கும் நான்காவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வருத்தம் தெரிவித்தார் இறுதிப் போட்டியின் தோல்வி குறித்து பேசிய அவர்” இந்தப் போட்டியில் துவக்கம் நன்றாகவே இருந்தது . டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது முதல் எங்களது திட்டப்படியே நடந்தது . ஆனால் ட்ராவஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆட்டம் போட்டியையே மாற்றி விட்டது . அவர்கள் இருவரும் எங்களை வெற்றிக்கான வாய்ப்பிலிருந்து விலகி நிற்கச் செய்தார்கள் என்றால் அது மிகையாகாது” என்று கூறினார்,

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நாங்கள் மீண்டும் போராடி போட்டிக்குள் வந்தோம் . ஆனால் ஆஸ்திரேலியா அணியின் அபாரமான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்திருக்கிறோம் . நிச்சயமாக அவர்களுக்கு பாராட்டை கொடுத்தே ஆக வேண்டும் . ஆட்டத்தின் இடைப்பட்ட காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும் . முதல் எண்ணின் செல் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம் . கடந்த நான்கு வருடங்களில் இரண்டு இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது ஒரு சாதனையான விஷயம் தான் அதற்காக நம் வீரர்கள் கொடுத்த உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை சிறந்தவை . இன்னும் கொஞ்சம் சிறப்பாக போராடி கோப்பையை எட்டிப் பிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ” இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றாதது வேதனையான ஒன்றுதான் ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக நாம் கொடுத்த கடின உழைப்பு மற்றும் திறமையான விளையாட்டால்தான் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறோம் மேலும் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் இந்திய அணி எங்கு விளையான்டாலும் பெருமளவில் போட்டிகளைக் காண வருவதோடு ஒவ்வொரு விக்கெட்டுகளையும் ஒவ்வொரு ரன்களையும் கொண்டாடி மகிழ்கின்றனர் நம் வீரர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர் அவர்களுக்கு எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்று கூறி முடித்தார்” இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.