சூரியகுமார் யாதவிற்கு பிசிசிஐ செய்வது துரோகம்; ரோகித் சர்மா துணைபோகிறார் – லெஜெண்ட் கபில் தேவ் சாடல்!

0
1077

ஒருநாள் போட்டிகளில் சூரியகுமார் யாதவ் பயன்படுத்தப்படும் விதம் அவருக்கு செய்யும் துரோகம் போல தெரிகிறது என சாடியுள்ளார் கபில் தேவ்.

இந்திய அணியில் வீரர்களை பயன்படுத்தும் விதம் சமீப காலமாக தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏனெனில் வங்கதேசம் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் அடுத்த போட்டியிலேயே வெளியில் அமர்த்தபட்டார்.

- Advertisement -

அதேபோல் இலங்கை அணியுடன் நடந்த டி20 தொடரில் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய சூரியகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளிலும் இடம்பெற்று இருந்தார். ஆனால் அவர் இருக்கும் பார்மை பயன்படுத்தாமல் ஒருநாள் போட்டிகளுக்கான பிளேயிங் லெவனில் விளையாட வைக்கவில்லை.

மோசமான பார்மில் இருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டு வரும் கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இருந்தார். இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் மற்றும் அவர்களது செயல்பாட்டை இந்திய அணி சரிவர அங்கீகரிக்கவில்லை என்கிற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.

அணி நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டையும் பிசிசிஐ வீரர்களின் தேர்வு செய்யும் விதத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலக கோப்பையை வென்றவருமான கபில் தேவ். அவர் பேசியதாவது:

- Advertisement -

“முதலாவதாக, பிசிசிஐ திட்டத்தை அவர்கள் போக்கில் விடுவது நல்லது. ஏனெனில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புபவன் நான். பலவீரர்கள் இந்திய அணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.

வெளியில் இருந்து பார்க்கும் பொழுது தற்போது மூன்று விதமான இந்திய அணிகள் இருப்பது போல தெரிகிறது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனித்தனியாக இருப்பது போல தெரிகிறது. இப்படி நிறைய வீரர்கள் அணியில் இருக்கும் பொழுது அது ஆரோக்கியமானது தான்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை மூன்று விதமான போட்டிகளுக்கும் ஒரே அணியாக இருப்பது தான் சிறந்தது. அப்பொழுதுதான் வீரர்கள் மத்தியில் சரியான புரிதல் இருக்கும். ஏதேனும் ஒன்று இரண்டு வீரர்கள் சரியாக செயல்படாதபோது அவர்களை மாற்றிக் கொள்ளலாம்.

இப்படி சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் போன்றவர்கள் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகும் அடுத்த போட்டியில் அவர்களை வெளியில் அமர்துவது ஒரு கிரிக்கெட் வீரனாக எனக்கு சரியானதாக படவில்லை. அது அவர்களுக்கும் மனதளவில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் நம்பிக்கையை குலைக்கும் என்று அணி புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.