2005ல் சேவாக் செஞ்சுரி நெருங்கினார்.. இப்படி சீண்டி விக்கெட் எடுத்து, சீரிஸ் ஜெயிச்சோம்! – முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வெளிப்படை பேட்டி!

0
658

2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்த போது, இப்படித்தான் சேவாக்கை சீண்டி விக்கெட் எடுத்து சீரிஸ் ஜெயிச்சோம் என்று பேசினார் முன்னாள் பாகிஸ்தான் பவுலர் ராணா நாவத்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே காலம் காலமாக பரபரப்பிற்கு மற்றும் எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அமைந்திருக்கும். இருதரப்பு தொடர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்தது. அதிலும் உலகக் கோப்பைக்கு நிகரான பரபரப்பு இருந்து வந்தது.

- Advertisement -

இப்போது விராட் கோலி எப்படி பாகிஸ்தான் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறாரோ, அதுபோல அப்போது வீரேந்திர சேவாக் பாகிஸ்தான் அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடி கிட்டத்தட்ட 1300 ரன்கள் குவித்தார் சேவாக். இதில் நான்கு சதங்கள் அடங்கும். முல்தான் டெஸ்டில் முச்சதம் அடித்தார். அதேபோல் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் 254 ரன்கள் குவித்தார்.

2005ல் இந்தியாவிற்கு வந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியபோது, டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட கிட்டத்தட்ட 600 ரன்கள் குவித்தார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் சதம் மற்றும் அரைசதங்கள் உட்பட 24 ரன்களை அடித்தார்.

- Advertisement -

ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவில் இரண்டையும் இந்திய அணி வென்றிருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் வீரேந்திர சேவாக் 85 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பிறகு இந்திய அணி போட்டியை இழந்தது. இந்த போட்டியில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொண்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர் ராணா நாவத் கூறுகையில்,

“இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது சேவாக் 85 ரன்கள் அடித்து சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று இருந்தோம். கேப்டன் இன் சமாம் உல் ஹக் எங்களிடம் வந்து சேவாக் விக்கெட்டை எடுப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்.

அப்போது நான் வீசிய பவுன்சரை சேவாக் மிஸ் செய்தார். உடனடியாக நான் அவர் அருகே சென்று ‘இதைக்கூட அடிக்க முடியவில்லை. நீ பேட்ஸ்மேன் இல்லை பாகிஸ்தானில் இருந்திருந்தால் உன்னை துளியும் மதித்திருக்க மாட்டோம்.’ என்று ஸ்லெட்ஜ் செய்து கோபப்படுத்தினேன்.

அதற்கு அடுத்த பந்தில், இப்போது சேவக் அவுட் ஆகி விடுவார் என்று என்னுடைய கேப்டனிடமும் கூறினேன். அதற்கு ஏற்றார்போல சேவாக் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த போட்டியிலும் வெற்றி பெற்று விட்டோம். அடுத்து வந்த போட்டிகளிலும் வென்று தொடரையும் கைப்பற்றி விட்டோம்.” என்று 2005 இல் சேவாக்கிற்கு ஸ்லெட்ஜ் செய்ததை பகிர்ந்து கொண்டார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ராணா நாவத்.