இந்தியாவில் ரன் அடிக்கலனா நீங்க வெளியேதான் இருக்கணும் – கேஎல் ராகுலுக்கு கங்குலி செய்தி!

0
156
Ganguly

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் தற்பொழுது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது!

இந்தத் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் வலுவான முன்னிலையை வகிக்கிறது!

- Advertisement -

இதக்கடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் இந்தூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் சரியான பேட்டிங் ஃபார்மில் இல்லாத
கே எல் ராகுலுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படுமா? இல்லை நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ள கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற விவாதங்கள் கிரிக்கெட் மட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன!

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்!

இது குறித்து அவர் கூறும் பொழுது
” இந்தியாவில் நீங்கள் ரன்கள் அடிக்காத பொழுது வெளிப்படையாக நீங்கள் விமர்சிக்கப்படுவீர்கள். நீங்கள் சிறிது காலம் தோல்வியடையும் பொழுது வெளிப்படையாக விமர்சிக்கப்படுவீர்கள். ராகுலுக்கு திறமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் ரன் அடிப்பதற்கான வழியை கண்டறிவார் என்றும் நான் நம்புகிறேன். அவர் வெளிநாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இந்தியாவில் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்த இடத்தில் முன்பு விளையாடியவர்கள் நிர்ணயித்த தரநிலைகள் மிகச் சிறப்பாக இருக்கிறது!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மேலும் இது போன்ற ஆடுகளங்கள் பந்து மாறி மாறி பவுன்ஸ் ஆகுவதால் விளையாடுவதற்கு கடினமாக இருக்கிறது. நீங்கள் பார்மில் இல்லாத பொழுது மேலும் பேட்டிங் செய்வதை இது கடினமாக்குகிறது. வீரர்களின் மீது அணி நிர்வாகம் அழுத்தத்துடன் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. ராகுலை முக்கியமான வீரர் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. ஆனால் எல்லாம் தாண்டி நாள் முடிவில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியம்” என்று கூறி இருக்கிறார்!