நீங்கள் அதிக நோ-பால் வைடு போட்டா வேற கேப்டன் கீழதான் விளையாடனும்; நான் போயிடுவேன்! – தோனி பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை!

0
5885
Dhoni

நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாடும் முதல் ஐபிஎல் போட்டி இன்று சென்னை லக்னோ அணிகளுக்கு இடையே ஐபிஎல் 16வது சீசனின் ஆறாவது போட்டியாக பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது!

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் குதித்தது. 200க்கு மேல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 24 ஆவது முறையாகும்.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர் கையில் மேயர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திருப்பி பதில் அடி தந்தார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் பௌண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறந்தது. 22 பந்தில் அரைசதம் அடித்து, பவர் பிளே முடிய ஒரு பந்து மீதம் இருக்கையில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். சென்னை அணி பவர் பிளேவில் 79 ரன்கள் எடுக்க, லக்னோ அணி 80 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து சென்னையில் சுழற் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீச ஆட்டம் சென்னையின் பக்கம் வந்தது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சகர் ஹாட்ரிக் வைட் வீசி வெறுப்பு ஏற்றினார். இன்னொரு பக்கத்தில் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே வைடு மட்டுமல்லாமல் பவர் பிளே மற்றும் டெத் ஓவர் என்று நோ பால் வீசியும் மகேந்திரசிங் தோனியை கடுப்பாக்கினார். எப்படியோ ஒரு வழியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி முதல் வெற்றியை பெற்றது.

வெற்றிக்குப் பின் பேசிய மகேந்திர சிங் தோனி ” இது ஹை ஸ்கோரிங் ஆட்டம். விக்கெட் எப்படி இருக்கும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். நான் மிகவும் மெதுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இது நீங்கள் அதிக ரன்களை எடுக்க கூடிய விக்கெட் ஆக இருந்தது. இந்த விக்கெட்டை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி ” வேகப்பந்துவீச்சை சற்று மேம்படுத்த வேண்டும். நிபந்தனைகளுக்கு ஏற்ப பந்து வீச வேண்டும். எதிரணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பது முக்கியம். இன்னும் ஒரு விஷயம் அவர்கள் நோபால் மற்றும் வைடுகளை இன்னும் கூடுதலாக வீச வேண்டும் என்றால் அவர்கள் ஒரு புதிய கேப்டன் கீழ்தான் விளையாட வேண்டியதாக இருக்கும். நான் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி விடுவேன். இது எனது இரண்டாவது எச்சரிக்கை. நாங்கள் அந்த ரண்களை அடித்ததற்கு காரணம் விக்கெட் அந்த முறையில் இருந்தது மட்டும்தான்” என்று கூறியிருக்கிறார்!