“நாங்க இத பேசி இருந்தா.. மக்கள் எங்கள பைத்தியமானு கேட்டிருப்பாங்க!” – கம்பீரின் அசரடிக்கும் பேச்சு!

0
390
Gambhir

இன்று உலகம் முழுவதிலும் இருந்து எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் மன அழுத்தம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் 90 மற்றும் 2000 காலக் கட்டங்களில் இப்படியான வார்த்தைகளை நாம் பெரிதாக கேட்டிருக்க மாட்டோம்.

மிகக் குறிப்பாக தற்பொழுது விளையாட்டு உலகத்தில் இந்த வார்த்தை பரவலாக உச்சரிக்கப்படுகிறது. மேலும் இதற்கான மெண்டல் கண்டிஷனர்கள் விளையாட்டு உலகில் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய அணியில் பாடி உம்டன் என்கின்ற தென் ஆப்பிரிக்கர் மெண்டல் கண்டிஷனராக இருந்து வருகிறார்.

- Advertisement -

முதன் முதலில் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய மனநலம் சீராக இல்லை என்று கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற ஓய்வுக்கு சென்றார். அடுத்து மேக்ஸ்வெல் இதே போல் சென்றார். பிறகு தான் சரியாக விளையாடாத காலகட்டத்தில் தனக்கு பெரிய மன பாதிப்பு இருந்ததாக விராட் கோலி வெளியில் தைரியமாக கூறினார்.

மூத்த தலைமுறை வீரரான கபில் தேவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆங்கிலச் சொல். நாம் விளையாட்டை மகிழ்வாக விளையாடினால் இப்படியான மன அழுத்தங்கள் எல்லாம் வராது. தற்பொழுது இந்த புதிய கலாச்சாரத்துக்கு எல்லாரும் பழகி இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். இது சர்ச்சையும் ஆகி இருந்தது.

தற்பொழுது இது குறித்து கம்பீர் பேசும் பொழுது ” 90 மற்றும் 2000 முற்பகுதியில் நீங்கள் மனநலம் குறித்து பேசினால் மக்கள் உங்களை பைத்தியம் என்று இருப்பார்கள். என்ன நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டிருப்பார்கள். குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் விளையாட்டு வீரர்களின் மனநலம் பற்றி எந்த ஒரு புரிதலும் இங்கு கிடையாது.

- Advertisement -

இங்கு விளையாட்டு வீரர்களுக்கு மன அழுத்தம் என்பதே கிடையாது, அவர்கள் அப்படியே வெளியில் சென்று சந்தோஷமாக விளையாட கூடியவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டு வாழ்க்கை நிச்சயம் அற்றது. ஒரு விளையாட்டு வீரரால் மட்டுமே அந்த அழுத்தத்தை உணரவோ கையாளவோ முடியும்.

விளையாட்டு வீரர்கள் உளவியலாளர்களிடம் செல்ல வேண்டும். இருவருக்கும் இடைப்பட்ட விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல பொதுவாகவே விளையாட்டு வீரர்களுக்கு ஏதாவது மனநலம் சார்ந்த பிரச்சனை இருந்தால், உளவியலாளர்களிடம் செல்வது நல்ல முடிவு.

இன்று மனநலம் குறித்து பேசுவதற்கு முக்கிய காரணம், தற்பொழுது எல்லாத் துறைகளிலும் போட்டி மிக அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு வேலை கொடுக்கும் பொழுதே டார்கெட்டும் கொடுக்கப்படுகிறது. நீங்கள் அதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் உங்களுக்கு பின்னால் உங்கள் வேலையை செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள். இங்கிருந்தேமன அழுத்தம் ஏற்படுகிறது.

அதே விளையாட்டு உலகம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு வீரருக்கு பின்னால் 40 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் இந்தியாவில். எனவே இந்த கார்ப்பரேட் உலகத்தில் துறைச் சார்ந்து மட்டுமல்லாமல், உறவுகள் சார்ந்தும்அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. முந்தைய தலைமுறையில் இருந்த வீரர்களுக்கு பெரிதாக இந்த அழுத்தம் கிடையாது!” என்று மிகத் தெளிவாக பேசியிருக்கிறார்!