“இந்தியாவில் விராட் கோலி விக்கெட்டை எடுத்தால் நீங்கள் காலி!” – நாதன் லயன் ஓப்பன் டாக்!

0
1706
Lyon

நான்கு போட்டிகள் கொண்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடந்து முடிந்தது!

இதை அடுத்து இரண்டு அணிகளுக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்க இருக்கிறது.

- Advertisement -

ஆடுகளம் குறித்தான சர்ச்சைகள் ஓரளவுக்கு முதல் போட்டி முடிந்த பிறகு ஓயும் என்று நினைத்து இருந்த நிலையில், ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து அது மீண்டும் தலை தூக்கி இருக்கிறது.

இந்த நிலையில் நாதன் லயன் விராட் கோலியின் விக்கட் பற்றி பேசி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலியின் கடந்த ஐந்து இன்னிங்ஸ்கள் 1, 19, 24, 1, 12 என்று சாதாரணமாகவே இருக்கிறது. ஆனால் இது இந்த தொடரில் மாறும் என்று பலரும் உறுதியாக நம்புகிறார்கள்.

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் மீண்டு வந்த விராட் கோலி, ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் மீண்டும் திரும்பி வந்தார். தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் திரும்பி வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

- Advertisement -

நாதன் லயன் பேசும் பொழுது ” விராட் கோலிக்கு எதிராக நீங்கள் களமிறங்குவது உங்களுக்கு எதிராக இந்தியாவே இருப்பது போல் நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் விராட் கோலியின் விக்கட்டை வீழ்த்தினாலோ அல்லது வாய்ப்பை உருவாக்கினாலோ நீங்கள் வெகுவிரைவில் உலக கிரிக்கெட்டில் வெறுக்கப்படும் நபராக மாறிவிடுவீர்கள். இதே அனுபவம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு நான் பந்து வீசியபோது எனக்கு கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விராட் கோலி நீண்ட காலமாக சிறந்தவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தொடர்ந்து உயர் மட்டத்தில் செயல்படுவார். அவருக்கு எதிராக விளையாடி போட்டியிடுவது பாக்கியம். நான் அவருக்கு எதிராக போட்டியிட்டு என்னுடைய மிகச் சிறந்ததை வழங்க நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்!