இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் துவங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று பெரிய சாதனைகளை உடைப்பதற்கான மிக அதிகபட்ச வாய்ப்பில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக சரியான பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வந்த விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவருடைய பாணியில் சரளமாக விளையாடி அரை சதம் அடித்ததின் காரணமாக மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று சாதனைகளை அவர் எளிதாக படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 285 இன்னிங்ஸ்களில் 13963 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 15 இன்னிங்ஸ்களில் வெறும் 37 ரன்கள் மட்டும் எடுத்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்கின்ற அரிய சாதனையை படைப்பார். எனவே இந்த சாதனையை விராட் கோலி மிக விரைவாக செய்து விடுவார் என்று நம்பலாம்.
தற்போது சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 350வது ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டி இருந்தார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் சங்கக்கரா 378 இன்னிங்ஸ்களில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்திருந்தார். இதை தற்பொழுது விராட் கோலி முறியடிக்கும் இடத்தில் இருக்கிறார்.
இந்திய வீரர்களில் முன்னாள் வீரர் ஷிகர் தவான் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் பத்து போட்டிகளில் 701 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர்களின் முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் 13 போட்டிகளில் 523 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 173 ரன்கள் எடுத்தால் ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பார்.
இதையும் படிங்க : TNPL ஏலம்.. வாஷிங்டன் சுந்தருக்கு சோகம்.. அஸ்வினை விட அதிக தொகைக்கு சிஎஸ்கே வீரர்.. முக்கிய தகவல்கள்
மேலும் இதனால் வரையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன் அடித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் 791 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இதை முறியடிக்க விராட் கோலிக்கு 263 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடும். எனவே நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் இந்த சாதனையையும் முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு இருக்கிறது.