தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 தொடரான டிஎன்பிஎல் டி20 லீக் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் வாஷிங்டன் சுந்தர் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிக குறைவான விலைக்கு ஏலம் போய் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
தற்போது டிஎன்பிஎல் ஒன்பதாவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் இந்திய அணிக்காக விளையாடியுள்ள வீரர்கள், மேலும் தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி இருக்கும், மேலும் மாநிலத்தில் இருக்கும் இளம் வீரர்கள் என பலரும் இந்த ஏலத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.
வாஷிங்டன் சுந்தர் அதிர்ச்சி
இன்று காலையில் தொடங்கிய டிஎன்பிஎல் மெகா ஏலத்தில் மார்க்யூ பிளேயர்களாக சிஎஸ்கே அணியின் விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஏலத்திற்கு வந்தார்கள். இதில் நான்கு முறை டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 18 லட்சம் ரூபாய்க்கு விஜய் சங்கரை வாங்கியது.
எனவே இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு பெரிய விலை கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாஷிங்டன் சுந்தர் ஏலத்தில் பெரிய விலைக்கு போகவில்லை. அவரை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெறும் ஆறு லட்ச ரூபாய்க்கு மிக எளிதாக வாங்கி ஆச்சரியப்படுத்தியது. இது ஏலத்தில் பலராலும் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
அதிக விலைக்குப் போன ரஞ்சி வீரர்
இந்த நிலையில் இதுவரையில் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரராக தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் எம்.முகமது 18.4 லட்சம் ரூபாய்க்கு சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார். மேலும் இதே அணி சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் முன்பு வாங்கப்பட்டு இருந்த ஹரி நிஷாந்தை 12 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி டி20 கிடையாது.. இந்த வீரரால இந்திய அணி சிக்கப்போகுது.. அவர விடாதிங்க – டேவிட் லாயிட் கருத்து
தற்பொழுது டி என் பி எல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பதினாறு லட்ச ரூபாய்க்கு அந்த அணியில் இருக்கிறார். ஆனால் விஜய் சங்கர் 18 லட்ச ரூபாய்க்கும், எம் முகமது 18.4 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போய் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்சிபி அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் சிங் 10.8 லட்ச ரூபாய்க்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார். இதுவரையில் இவர்கள் மட்டுமே 10 லட்சம் ரூபாயை தாண்டிய வீரர்களாக விற்கப்பட்டு இருக்கிறார்கள்!






