உலக கோப்பைல  கோலி ரோஹித் ஸ்மித்க்கு இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. அந்த ஆள் காலி – அஷ்வின் எச்சரிக்கை!

0
389
Ashwin

தற்போதைய கிரிக்கெட் உலகில் ஆப் ஸ்பின் என்கின்ற தனி சுழற் பந்துவீச்சு கலை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்று கூறலாம். தற்பொழுது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இதற்கென்று பிரதான சுழற் பந்துவீச்சாளர்களை எந்த அணியும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மாறாக அணியிலிருந்து ஒரு பார்ட் டைம் ஆப் ஸ்பின்னரை பேட்ஸ்மேன்களிடமிருந்து உருவாக்கவே பார்க்கிறார்கள்!

இப்படியான நிலையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைசிறந்த ஆப் ஸ்பின் பவுலராக கிரிக்கெட் உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் அவர் தக்க வைத்திருக்கும் இடம் என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

- Advertisement -

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் எதையும் நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கக்கூடியவர். இதுவே அவருக்கு கிரிக்கெட் உலகில் ஒரு பெரிய பிரச்சினையாகவும் தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர் பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே கிரீசை விட்டு தாண்டினால் செய்யும் ரன் அவுட்டை ஆதரிக்க கூடியவர். இதற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

தற்பொழுது இப்படியான ரன் அவுட்டுகள் ஒரு பந்துவீச்சாளரால் உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்மித் மற்றும் ரூட் போன்ற பெரிய வீரர்களுக்கு எதிராக செய்யப்பட்டால், அப்போதைய நிலைமை என்னவாக இருக்கும்? அதைச் செய்த பந்துவீச்சாளர் மீது எப்படியான விமர்சனங்கள் வைக்கப்படும்? என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நிலைமை நரகமாகிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்படியான ரன் அவுட்டை செய்யும் பந்துவீச்சாளரின் கேரக்டரை மிகவும் தவறாகச் சித்தரிப்பார்கள். இதை சில வல்லுனர்களும் இந்த மாதிரியான அவுட்டை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்களும் செய்வார்கள்.

- Advertisement -

இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால், பந்துவீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் வெளியே செல்லாமல் சரியாக இருப்பது மட்டும்தான். இப்படி இருந்தால் பந்துவீச்சாளர் அதை செய்ய மாட்டார்.

இந்த நேரத்தில் அனைத்து அணிகளும் இப்படியான ரன் அவுட்டை செய்வது கிடையாது. ஆனால் நாம் உலக கோப்பை மாதிரியான ஒரு பெரிய தொடருக்கு வருகிறோம். இப்படியான தொடரில் இதற்கு எல்லோருமே தயாராக இருப்பார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் இந்த இடத்தில் இருந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து நாங்கள் இதை செய்ய மாட்டோம் என்றால் சரி வராது. உலகக் கோப்பையை வெல்வது ஒவ்வொரு அணிகளுக்கும் கனவானது. எனவே இருக்கின்ற எல்லா சாத்தியமான விஷயங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!