“இது நடந்தா போதும்.. அமெரிக்காவும் நமக்குதான்” – கவாஸ்கர் சுவாரசிய தகவல்!

0
84
USA

டி20 கிரிக்கெட்டின் வருகை, கிரிக்கெட்டை இதுவரை செல்லாத நாடுகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று இருக்கிறது. இதன் மூலம் கிரிக்கெட் பற்றிய அறிமுகம் நிறைய நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

மேலும் டி20 கிரிக்கெட் குறுகிய வடிவம் என்கின்ற காரணத்தினால் ரசிகர்கள் நிறைய கிடைக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், குறைந்தபட்ச திறமைகளை தேவை என்பதால் எளிதில் ஒரு நாட்டால் ஒரு டி20 அணியை உருவாக்கி விட முடிகிறது.

- Advertisement -

இதே ஒரு நாடு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு பல ஆண்டுகள் அந்த நாடு கிரிக்கெட் உள்கட்டமைப்பில் உழைக்க வேண்டும். டி20 கிரிக்கெட் க்கு அவ்வளவு காலம் தேவைப்படாது. இதன் காரணமாக டி20 கிரிக்கெட் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது.

இதுவரையில் கிரிக்கெட் செல்லாத நாடாக இருந்த அமெரிக்காவில் தற்பொழுது கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதே சமயத்தில் அமெரிக்கா கடந்த ஆண்டில் ஐபிஎல் தொடர் போல மேஜர் கிரிக்கெட் லீக் என்று தனிப்பட்ட டி20 தொடரை நடத்தியிருக்கிறது. இந்த அமெரிக்க டி20 லீக் தொடரில் ஐபிஎல் முதலாளிகள் அணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரண்டு நாடுகள் சேர்ந்து நடத்துகிறது. தொடரை நடத்துகின்ற காரணத்தினால் இரண்டு நாடுகளுமே நேரடியாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றும் இருக்கிறது.

தற்பொழுது கிரிக்கெட்டில் அமெரிக்கா குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது ” அமெரிக்காவில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகள் கடைசிப் பந்தில் முடிவடைகின்ற சுவாரசியத்தில் இருந்தால், அமெரிக்கர்கள் இது என்ன விளையாட்டு என்று நிச்சயம் பார்ப்பார்கள். மேலும் இது பேஸ் பாலை விட சிறந்ததாக இருக்கிறது என்று அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

நீங்கள் கிரிக்கெட்டுக்கு அமெரிக்காவில் ஒரு சந்தையை உருவாக்க விரும்பினால், உங்களுக்கு வலிமையான ஒரு உள்நாட்டு அணி தேவை. அமெரிக்கா நீ எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறது என்ற நிறைய மக்கள் உங்களை பின்தொடர்வார்கள்” என்று கூறியிருக்கிறார்!