“இப்படியே போனால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்.. காப்பாற்ற இத மட்டும் செய்யுங்க” – ஜேசன் ஹோல்டர் கவலை

0
545
Holder

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளின் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கு ஏழு அறிமுக வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்று இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இந்த அணியில் ஐந்து வீரர்களுக்கு மட்டுமே உண்டு.

மேலும் இந்த டெஸ்ட் தொடரில் ஜேசன் ஹோல்டர் மற்றும் கையில் மேயர்ஸ் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. சவுதி அரேபியாவில் நடைபெறும் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்கு சென்று விட்டார்கள்.

இதன் காரணமாக வெஸ்ட் கிரிக்கெட் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டது. மேலும் விளையாடாமல் விலகிச் சென்ற வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதரவும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து தொடரில் விளையாடாத ஜேசன் ஹோல்டர் கூறும்பொழுது ” இது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் மிகவும் பிடித்தது. நான் அடுத்த டெஸ்ட் தொடர்களுக்கு நிச்சயம் கிடைப்பேன். எதிர்காலத்தில் நான் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன். தற்பொழுது நான் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு என்னை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நேர்மையாக இப்படியே டெஸ்ட் கிரிக்கெட் சென்று கொண்டு இருந்தால் சீக்கிரம் அழிந்து விடும். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் மூன்று நாடுகள் தான் பெரிய நாடுகளாக இருக்கின்றன. நிதி விஷயத்தில் எங்களைப் போன்ற சிறிய நாடுகள் அவர்களுடன் போட்டியிட முடியாது. அவர்களிடம் இருக்கும் நிதி ஆதாரங்கள் எங்களிடம் இல்லை.

எனவே உலகில் மிகப்பெரிய டி20 லீக்குகள் நடைபெறும் நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு பொதுவாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரு சம்பளத்தை ஐசிசி நிர்ணயிக்க வேண்டும். இப்படி செய்ய முடிந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றலாம்” என்று கூறி இருக்கிறார்.