நார்கியா, ரபாடா.. ரெண்டு பேரும் கோலி ஃபார்ம் முன்னாடி ஒன்னுமே இல்ல – அக்ஸர் பட்டேல் பேட்டி!

0
809

விராட் கோலி சிறந்த பார்மில் இருக்கிறார், எதிரணியில் எப்படிப்பட்ட பவுலர்கள் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று பேட்டியளித்துள்ளார் சுழல் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் குரூப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் மூன்று புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா அணி இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இரு அணிகளும் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று மோதிக் கொள்கின்றன. இந்திய அணி இரண்டு வெற்றிகளுடன் நல்ல பார்மில் இருப்பதால் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி விடும் என்று பலரும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அப்படி இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

ஆனால் நல்ல பார்மில் இருக்கும் தென்னாபிரிக்க அணி இந்தியாவை அவ்வளவு எளிதாக வெற்றி பெற விடாது. வங்கதேச அணிக்கு எதிராக பேட்டிங்கில் 205 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சில் 101 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 100 ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இப்படி பேய் ஃபார்மில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை எப்படி எளிதாக வெற்றி பெற விட்டுவிடும். குறிப்பாக அவர்களின் பந்துவீச்சாளர்கள் ரபாடா மற்றும் நார்கியா இருவரும் சிறப்பான ஃபார்மில் இருப்பதும் அவர்களுக்கு பலத்தை கொடுக்கிறது.

இந்நிலையில், ‘அவர்களிடம் எப்படிப்பட்ட பவுலர்கள் இருந்தால் எங்களுக்கு என்ன? எங்களிடம் விராட் கோலி இருக்கிறார்!.’ என்று பெருமிதம் ஆகவும் நம்பிக்கையுடனும் பேட்டி அளித்துள்ளார் அக்சர் பட்டேல். அவர் கூறுகையில்,

“அடுத்த போட்டி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இருக்கிறது. அதற்கென்று எங்களிடம் பிளான் இருக்கிறது. அவர்களிடம் நார்கியா மற்றும் ரபாடா போன்ற பவுலர்கள் இருந்தால் என்ன? நம்மிடம் சிறப்பான பார்மில் இருக்கும் விராட் கோலி இருக்கிறார். எதிரணியில் எவ்வளவு பெரிய பவுலர்கள் இருந்தாலும் கவலை இல்லை.

ஆனாலும் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் வேலை செய்து வருகிறோம். நாங்களும் யார் என்பதை இவர்களுக்கு காட்டுவோம். இதற்கு முன்னர் விளையாடிய அணிகளை போன்று நாங்கள் இல்லை.” என்று ஆவேசத்துடன் பேட்டி அளித்தார்.