“பிட்ச்ல உயிர் இல்லனா.. இந்திய பவுலர்ஸ் என்ன பண்ணுவாங்க?” – தென் ஆப்பிரிக்க லெஜெண்ட் மாஸ் ஸ்டேட்மெண்ட்!

0
4241
ICT

தற்போது இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலிருந்து சில விஷயங்கள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

அதில் முக்கியமான விஷயம் டி20 கிரிக்கெட் அணுகுவது போல ஒருநாள் கிரிக்கெட்டை அணுக முடியாது என்பது. இந்த அணுகுமுறைதான் தற்பொழுது இங்கிலாந்து அணியை சாய்த்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஃபீல்டிங் விதிகளின் காரணமாக, 11 ஓவர் முதல் 40 ஓவர் வரை வெளிவட்டத்தில் நான்கு பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், பகுதி நேர பந்துவீச்சாளர்களை வைத்து ஒப்பேற்ற முடியாது என்பதும், சரியான நான்கு அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் தேவை என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது.

தற்போது புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளை எடுத்துக் கொண்டால், அந்த அணியில் பௌலிங் யூனிட்டில் குறைந்தபட்சம் சிறந்த நான்கு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்களில் யாரும் அரைகுறை ஆல் ரவுண்டர்களாக இருக்க மாட்டார்கள்.

இந்த விஷயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இந்திய அணியின் ஐந்து பந்துவீச்சாளர்களும் முழுமையான பந்துவீச்சாளர்கள். ஐந்து பேருமே உலகத்தரமான பந்துவீச்சாளர்கள். இதன் காரணமாகத்தான் இந்திய அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பௌலிங் யூனிட் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தாலும் அதற்கேற்ற ரன்களை எதிரணியை எட்ட விடுவதில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீதான சுமை குறைந்து விடுகிறது. அவர்கள் மெதுவாக ஆரம்பித்து சுலபமாக விளையாட முடிகிறது. அதே சமயத்தில் பேட்டிங் யூனிட்டில் மிக வேகமாக ரோகித் சர்மா விளையாடுவதும் இந்திய பேட்ஸ்மேன்களின் சுமையைக் குறைக்கிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் கேப்டன் கிரேம் ஸ்மித் இது குறித்து கூறும் பொழுது ” இந்தியாதான் இந்த விஷயத்தில் மிக வலிமையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவுக்கு உலகத்தரமான இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்கள்.

மேலும் அவர்களிடம் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, சமி, சிராஜ் ஆகிய மூன்று பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இப்படி இந்திய அணி சுழற் பங்கு வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சில் வலிமையாக இருக்கிறது.

இவர்கள் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் அட்டாக்கிங் முறையில் சென்று விக்கெட்டுகளை கைப்பற்ற கூடியவர்களாக இருக்கிறார்கள். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்று சொன்னாலும், இவர்கள் அதிலும் சென்று விக்கெட்டை கைப்பற்ற கூடியவர்களாக இருப்பதால், இவர்கள் மிகப்பெரிய ஆயுதங்கள்!” என்று கூறி இருக்கிறார்!