நாளை இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கின்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மேற்கொண்டு 39 ரன்கள் எடுத்தால் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் படைத்த முக்கியமான சாதனை ஒன்றை சமன் செய்வார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க சென்று ஆட்டம் இழந்தார். இல்லையென்றால் விராட் கோலியின் அந்த குறிப்பிட்ட சாதனையை முறியடித்து இருப்பார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் முதன்முதலாக இந்திய அணிக்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதிவேக ஜோப்ரா ஆர்ச்சர் வீச, சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டு அசத்தியிருந்தார்.
இப்படி அதிரடியாக ஆரம்பித்த சூரியகுமார் யாதவின் சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை தற்பொழுது வரை உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 72 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் சூரியகுமார் யாதவ் ஒட்டுமொத்தமாக 2461 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 4 சதம் மற்றும் 20 அரைசதம் அடக்கம். மேலும் ஆவரேஜ் 42 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 169 என பிரமிப்பாக இருக்கிறது.
விராட் கோலி 73 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் 2500 ரன்கள் எடுத்து, அதிவேகமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆக இருந்தார். இவரது சாதனையை 67 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் முறியடித்து இருந்தார். தற்போது நாளைய போட்டியில் மேற்கொண்டு சூரியகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தால், 73 இன்னிங்ஸ்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்வார்
இதையும் படிங்க : ஹர்திக் இல்லனா மயங்க் ஓட விட்டிருப்பார்.. கண்டிப்பா இதனால அவர் ஆஸி போவார் – பாக் பசித் அலி நம்பிக்கை
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 67
விராட் கோலி (இந்தியா) – 73
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 76
ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) – 78
மார்ட்டின் கப்டில் (நியூசிலாந்து) – 86