இந்திய அணியின் இளம் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஆசிரியர் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
மயங்க் யாதவ் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு அறிமுகமானார். முதல் ஓவரையே மெய்டனாக வீசினார். மேலும் நான்கு ஓவருக்கு 21 ரன் மட்டுமே தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அவருடைய பந்துவீச்சு புத்திசாலித்தனமாகவும் இருந்தது.
ஆடுகளத்திற்காக தன்னை மாற்றிக் கொண்ட மயங்க் யாதவ்
முதல் போட்டி நடைபெற்ற குவாலியர் மைதானத்தின் ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் இல்லை. இதன் காரணமாக தன்னுடைய பலமான வேகமான பவுன்சர் பந்துகளை வீசுவதை மயங்க் யாதவ் நிறுத்திக் கொண்டார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்தை கொஞ்சம் ஃபுல் லென்த்தில் வீசினார்.
இது அவருடைய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. மேலும் அவருடைய பந்துவீச்சில் சில பல பந்துகளை பேட்ஸ்மேன்கள் முன் காலில் வந்து விளையாட தடுமாறினார்கள். தொடர்ந்து பெரும்பாலும் பின் காலில் கிரீசில் பதுங்கியே அவரது பந்தை விளையாடினார்கள். அவரது வேகத்தைக் கொண்டு பேட்ஸ்மேன்கள் மனதில் ஒரு அச்சுறுத்தலை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
ஹர்த்திக் இல்லனா கதையே வேற
மயங்க் யாதவ் குறித்து பசித் அலி கூறும் பொழுது “இது மயங்க் யாதவின் கனவு அறிமுகமாகும். அவர் அற்புதமான ஒரு மெய்டன் உடன் துவங்கினார். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 149.9 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அவர் காயத்திலிருந்து வந்திருக்கின்ற காரணத்தினால் தான் 157 மற்றும் 158 கிலோ மீட்டர் என்கின்ற அதி வேகத்திற்கு அவர் செல்லவில்லை. ஆனால் கூடிய விரைவில் அவர் அந்த வேகத்தை எட்டுவார்”
இதையும் படிங்க : 492 ரன்ஸ்.. சென்னையில் இந்திய வீரர்கள் ரன் மழை.. 9 பவுலர்களை உபயோகித்த ஆஸி அணி.. U19 டெஸ்ட் கிரிக்கெட்
“ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அவரது கையில் புதிய பந்தை கொடுத்து இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். பெரிய பயத்தை உண்டாக்கி இருப்பார்.நீங்கள் போட்டியை நன்றாக பார்த்தால், அவரது பந்துவீச்சை முன் காலில் எதிர்கொண்டு விளையாட எந்த பேட்ஸ்மேனும் தயாராக இல்லை. அவர் காயம் ஏதும் இல்லாமல் இருந்து ஆஸ்திரேலியா செல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.