12 ரன்.. 12 சிக்ஸ்.. ரோஹித் சர்மா படைக்கப் போகும் வரலாற்று 2 சாதனைகள்.. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

0
742

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவதற்காக மிக தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடர் மூலமாக சிறப்பான சாதனை ஒன்றை படைக்க தயாராக இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

சமீபத்தில் ரோஹித் சர்மா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி மீண்டும் தனது பழைய பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழ்நிலையில் அவரது சிறந்த பேட்டிங் ஃபார்மோடு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறது.

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் விளையாடி ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா இரண்டு முக்கிய சாதனைகள் படைக்க தயாராக இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா படைக்கப் போகும் சாதனை

அதாவது இதுவரை ஒருநாள் போட்டிகளில் 260 இன்னிங்ஸ்கள் விளையாடி மொத்தமாக 338 சிக்சர்களை ரோஹித் சர்மா அடித்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா இன்னும் 12 சிக்ஸர்கள் அடித்தால் 300-க்கும் குறைவான போட்டிகளில் 350 சிக்ஸர்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா படைப்பார். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி மட்டுமே அதிக சிக்ஸர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 321 போட்டியில் விளையாடியுள்ள அப்ரிடி 351 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:ரோஹித்துக்கு உண்மையான சவாலே இப்பதான் இருக்கு.. அந்த 10 ஓவர்தான் போட்டியை நிர்ணயிக்கும் – இந்திய முன்னாள் வீரர்

ஆனால் ஒட்டுமொத்த சர்வதேச இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 631 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் கடக்க இன்னும் 12 ரன்கள் மட்டுமே தேவை. இந்த இலக்கை அடைந்தால் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னர் ஏற்கனவே இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோர் என் சாதனையை படைத்திருக்கிறார்கள்.

- Advertisement -