சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பும்ரா இல்லாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 விக்கெட்டுகள் கைப்பற்றி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவர் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பும்ரா அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடரை தவற விடுகிறார்.
இந்திய அணிக்கு முக்கியமான கட்டங்களில் போட்டிகளை மீண்டும் இந்திய அணி பக்கம் திருப்புவதில் ஜாம்பவான் ஆன பும்ராவின் 10 ஓவர்களை யார் பொறுப்பு எடுத்து வீசப் போகிறார் என்ற கேள்வி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்கர்சர்க்கார் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு பத்து ஓவர்கள் முக்கிய பங்கு வகிக்கும் என சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இந்திய அணி மிஸ் செய்யும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி எப்படி பந்து வீசப்போகிறது என்பதுதான் முக்கியம். நாங்கள் இப்போது பம்ராவை தவிர விடுகிறோம். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், ஒரு நாள் போட்டிகளில் இன்னும் 10 ஓவர் வீச வேண்டியுள்ளது. அவர் தனது இரண்டாவது ஸ்பெல், புதிய பந்து பழைய பந்து என அனைத்திலும் சிறப்பாக செயல்படுவார் எனவே அவரை இப்போது இந்திய அணி தவறவிடும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:பாக் கேப்டனுக்கு மகிழ்ச்சி இல்லை.. அவர எதுக்குங்க டீம்ல எடுத்தீங்க.. தேர்வாளர்களை சாடிய பசித் அலி
பும்ரா இல்லாத நிலையில் அவரது இடத்தை நிரப்ப முகமது ஷமி பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரோகித் சர்மாவுக்கு முக்கிய வீரராக திகழும் பும்ரா இந்த முறை அவர் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்கொள்ளப் போகிறார். எனவே இந்திய அணி இதில் எப்படி செயல்பட போகிறது என்பதை பார்க்க அனைத்து இந்திய ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி இந்த கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.