“ஒன்னு மட்டும் நடந்தா.. இந்தியா கையிலதான் உலக கோப்பை இருக்கும்!” – கங்குலி அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
2936
Ganguly

அடுத்த நான்கு வருடம் ஒருநாள் கிரிக்கெட்டின் உலக சாம்பியனாக யார் இருப்பார்கள் என்பதை தீர்மானிப்பதற்கு இடையில் ஒருநாள் மட்டுமே இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் மிக வேகமான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் அதற்கு உயிர் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

காரணம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இதுவரையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களை விட எல்லா வகையிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற தொடராக அமைந்திருக்கிறது.

மிகக்குறிப்பாக இந்தியாவில் நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடாத போட்டிகளுக்கும் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் மைதானங்கள் நிரம்பும் அளவுக்கு ரசிகர்கள் வந்தார்கள்.

வெளிநாட்டு அணிகளுக்கு இந்திய ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தந்த வரவேற்பு, அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விஷயமாக அமைந்தது.

- Advertisement -

இப்படியான காரணங்களால் இந்த சிறப்பு மிகுந்த இந்தியாவில் நடத்தப்படும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை யார் வெல்வார்கள் என்கின்ற பெரிய எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அகமதாபாத்தில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே ஒரே ஒரு போட்டி மட்டுமே உலகக்கோப்பையை தீர்மானிக்க நிற்கிறது.

இந்திய அணி இந்தத் தொடரில் இதுவரை எப்படி விளையாடி வந்திருக்கிறது அதையே இறுதிப் போட்டியில் தொடரும் என்றால் இந்திய அணியை யாராலும் தடுக்க முடியாது. ஆஸ்திரேலியா அணியும் சிறந்த அணி. எனவே இறுதிப் போட்டி மிகச் சிறப்பானதாக அமையும்!” என்று அவர் கூறியிருக்கிறார்!