“விராட் கோலி கேப்டன்சியில நடந்த சம்பவத்துக்கு என் மனைவி கூட இல்லாம இருந்திருந்தால் வேற மாதிரி ஆகியிருக்கும்!” – சாகல் பேட்டி!

0
938
Chahal

இந்திய கிரிக்கெட்டில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற் பந்துவீச்சாளராக யுஸ்வேந்திர சகல்தான் இருக்கிறார். போட்டியில் எந்த நேரத்திலும் விக்கெட் வீழ்த்தக்கூடிய ஸ்ட்ரைக் பவுலர் இவர்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து பின்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 8 வருடங்கள் வெற்றிகரமான பந்து வீச்சாளராக விளங்கினார்.

- Advertisement -

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் எப்படியும் தன்னை மீண்டும் பெங்களூர் அணிக்கு எடுப்பதாக பெங்களூர் அணி நிர்வாகம் கொடுத்து இருந்த வாக்குறுதியை காப்பாற்றாததில் இப்பொழுதும் கோபத்தில் இருக்கிறார்.

அதே சமயத்தில் அவரை 6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல் அணி வாங்கியதோடு அவர் அந்த வருடத்தின் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். மேலும் தற்போது அவர் போட்டியின் கடைசி கட்டத்திலும் பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

இப்படி இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான டி20 சுழற் பந்துவீச்சாளரான அவருக்கு, அவர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விராட் கோலி கேப்டனாக இருந்த இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடியும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய துரதிஷ்டமாகவும் சோகமான விஷயமாகவும் அவருக்கு இருக்கிறது.

- Advertisement -

கோவிட் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் யுனைடெட் அரபு எமிரேட்டில் வைத்து நடத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் அங்கு விளையாட சென்றார். ஆனால் அந்தத் தொடர் முடிந்து அங்கு வைத்து நடத்தப்பட்ட டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் மும்பை இந்தியன் அணியில் இடம் பெற்று இருந்த ராகுல் சகர், ஆச்சரியமான தேர்வாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்புகள் தரப்பட்டு இருந்தது. ஆனால் அந்த உலகக் கோப்பையில் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரை இறுதிக்கு தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது.

இது குறித்து தற்பொழுது பேசியுள்ள சாகல் ” கோவிட் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை தொடர நாங்கள் அங்கு செல்ல வேண்டி இருந்தது. நாங்களும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருந்தது. இல்லையென்றால் ஓய்வெடுக்க வெளியே சென்று இருக்கலாம்.

இதில் சிறந்த விஷயமாக என்னுடைய மனைவி அப்போது என் உடன் இருந்தார். அவள் என்னுடன் இருந்ததால் என்னால் என்னை கட்டுப்படுத்தி என் கோபத்தை அடக்கி கொள்ள முடிந்தது. அவள் என்னுடன் இருந்திருக்காவிட்டால் நான் மிகவும் விரக்தி அடைந்து இருப்பேன்.

விராட் கோலி கேப்டன் ஆக இருந்தும் எனக்கு 2011 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்காதது மிகவும் விசித்திரமான ஒன்றாக இருந்தது!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்!