இன்னும் 5 விக்கெட்.. ஷமி படைக்க காத்திருக்கும் இமாலய சாதனை.. 101 போட்டியில் நடக்குமா? – சுவாரசிய தகவல்கள்

0
448
Sham

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முகமது ஷமி உலக சாதனை ஒன்றை படைப்பதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டாலும் கூட, அவருடைய ஒருநாள் கிரிக்கெட் புள்ளி விபரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவருக்கு உலகக் கோப்பை சாதனைகள் கிடைத்தது. மேலும் அதிக விக்கெட் கைப்பற்றியவராக வந்தார்.

- Advertisement -

உடல் தகுதியை நிரூபித்த முகமது ஷமி

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது தனது காலில் இருந்த காயத்திற்கு ஓய்விலிருந்து சிகிச்சை செய்து கொள்ளாமல் அணிக்காக ஊசி போட்டுக் கொண்டு விளையாடிய காரணத்தினால், அவருடைய காயம் பெரிதாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக மாறியது. இதன் காரணமாக அவர் கிரிக்கெட்டுக்கு திரும்ப ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்பட்டது.

இந்த நிலையில் தனது மாநில அடியான பெங்கால் அணிக்கு ரஞ்சி, சையத் முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே டிராபி என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி உடல் தகுதியை நிரூபித்தார். இதன் மூலம் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடர் என இரண்டிலும் இந்திய அணிக்கு அவர் இடம் பெறுவார் என்பது உறுதி.

- Advertisement -

முகமது ஷமிக்கு காத்திருக்கும் உலகச் சாதனை

தற்போது முகமது ஷமி 100 ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் அவரால் கைப்பற்ற முடிந்தால், அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்கின்ற இமாலய உலகச் சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : நான் ரிஷப் பண்ட்க்கு பிஆர் கிடையாது.. ஜெனரேஷன் பிளேயருக்கு நீங்க செஞ்சது சரியில்ல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

தற்போது ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் 102 ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த வகையில் உலகச் சாதனை படைத்திருக்கிறார். மேலும் அஜித் அகர்க்கர் 133 ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அகர்கரின் இந்த சாதனையை முகமது ஷமி மிக சுலபமாக முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -