நான் ரிஷப் பண்ட்க்கு பிஆர் கிடையாது.. ஜெனரேஷன் பிளேயருக்கு நீங்க செஞ்சது சரியில்ல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
186
Aakash

இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறாதது குறித்து ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் ஜனவரி 22ஆம் தேதி ஆரம்பித்து பிப்ரவரி 2ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கு நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.

- Advertisement -

தேர்வுக்குழு புதிய சிந்தனை

இந்தியத் தேர்வுக்குழு கடந்த ஏழு டி20 போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்திருக்கும் சஞ்சு சாம்சனை தங்கள் துவக்க ஆட்டக்காரராகவும், மேலும் விக்கெட் கீப்பராகவும் பார்க்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து அவர் விளையாடும் அணியில் இடம் பெறுவார் என்று உறுதி ஆகிறது. இதன் காரணமாக இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது.

இதன் காரணமாக அந்த இடத்திற்கு துருவ் ஜுரலை தேர்ந்தெடுத்து இருக்கிறது. மேலும் அந்த இடத்தில் இடம் பெற்று வந்த ஜிவேஷ் சர்மாவை நீக்கி இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்டின் ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கை நிலையிலேயே, அவரை இந்திய டி20 அணிக்கு வெளியில் வைக்கும் முடிவு சரியானது கிடையாது அவர் ஒரு தலைமுறையின் வீரர் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான் அவருடைய பிஆர் கிடையாது

இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நீங்கள் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யவில்லை. அவர் உங்களுடைய திட்டத்தில் இருக்க முடியாது என்று கூற முடியாது. இப்படி இருக்கும் பொழுது அவரது தொழில் வாழ்க்கையில் ஆரம்ப நிலையான இப்போதே அவரை டி20 அனைத்து தேவை இல்லை என்கின்ற முடிவை எடுத்தீர்களா? நான் அவருக்காக பிஆர் வேலை செய்யவில்லை. ரிஷப் பண்ட் ஒரு தலைமுறையின் வீரர்”

இதையும் படிங்க : 2025 சாம்பியன்ஸ் டிராபி.. நியூசி அணி அறிவிப்பு.. மாஸ் பவுலிங் யூனிட்.. இந்தியாவுக்கு நெருக்கடி

“நீங்கள் அவர் மீது முதலீடு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் அவருக்கு ஓய்வு கூட கொடுத்திருக்கலாம். ஆனாலும் கூட சாம்பியன்ஸ் டிராபிக்கு அவர் உறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்கின்ற நிலை இல்லை. அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பு இல்லை. நீங்கள் அவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மேலும் தற்போது என்ன காரணத்தினால் தேர்வு செய்யவில்லை என்பது குறித்து நீங்கள் அவருக்கு நல்ல முறையில் எடுத்துக் கூற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -