“கோலி ரன் அடிச்சா இந்தியா ஜெயிக்கும்.. ஆனா பாபர் அசாம் ரன் அடிச்சா..!” – ஷாகித் அப்ரிடி கடுமையான விமர்சன விளாசல்!

0
1196
Babar

பாகிஸ்தான் அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வென்று மனரீதியாக பெரிய நம்பிக்கை பெற்றது. மேலும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்தது.

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்த, முடியாமல் அந்த அணியிடம் சரணடைந்து தோற்றது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் பெரிய புயலையை உருவாக்கி விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்குள்ளும் அணிக்குள்ளும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது குறித்து வெளிப்படையாகவே முன்னாள் வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் கேப்டன் பாபர் அசாமுக்கும் இடையே நல்லவிதமான உறவு இல்லை என்கின்ற தகவலும் வெளியில் வந்தது. மேலும் வீரர்களுக்கு ஐந்து ஆறு மாதங்களாக சம்பளம் பாக்கி இருப்பதும் தெரிந்தது.

இதற்கு அடுத்து நேற்று முன்தினம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி அதிரடியான வெற்றியை 32 வது ஓவர்களில் பெற்று கணிசமாக ரன் ரேட் தேற்றி இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். அவர் அடித்த மூன்று அரை சத ஆட்டங்களிலும் பாகிஸ்தான அணி தோல்வி அடைந்திருக்கிறது. அதுவே அவர் ரன் பெறாமல் வெளியேறிய மூன்று ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி வென்று இருக்கிறது. பாபர் அசாம் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 76 மட்டுமே.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “பாபர் ரன் அடிப்பதும், பாபர் அணி வெற்றி பெறுவதற்காக ரன் அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலியின் கே.எல்.ராகுலும் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் பந்துகளை விளாசி ரன்கள் கொண்டு வந்து அணியை வெற்றி பெற வைக்கிறார்கள்.

பெரிய பேட்ஸ்மேன் என்கின்றஇடத்தை அடைந்த பின்னால், அந்த இடத்தை தக்க வைப்பது கடினமான காரியம். அதற்கேற்றபடி தொடர்ந்து விளையாட வேண்டும்.

பாபர் அசாம் பேட்டிங் செய்யும்பொழுது பாகிஸ்தான் அணி வெல்லும் என்கின்ற எண்ணம் நமக்கு உருவாக வேண்டும். ஆனால் நமக்கு அப்படிப்பட்ட உணர்வு வருவதில்லை.

பாபர் அசாம் 50, 60 ரன்கள் எடுப்பார் என்று நமக்கு தெரியும். ஆனால் அவர் ஆட்டத்தை வென்று தருவார் என்று எங்களால் நம்ப முடிவதில்லை!” என்று வெளிப்படையாக மிகக் கடுமையாகவே கூறியிருக்கிறார்!