“கோலியை கேப்டனா விட்டிருந்தா இந்நேரம் இந்தியா உலக கோப்பைக்கு தயாரா இருக்கும்” – பாகிஸ்தான் வீரர் பரபரப்பான கருத்து!

0
415
Viratkohli

இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி இந்தியாவில் நவம்பர் 19ஆம் தேதி வரை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முதல் முறையாக முழுமையாக நடைபெற இருக்கிறது!

இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்பை பொருத்தவரை முன்னணி வீரர்களின் காயம் மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. எனவே கையில் கிடைக்கும் ஆட்டங்களில் எல்லாம் இளம் வீரர்களை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது.

- Advertisement -

உலக கோப்பையில் பங்குபெறும் முன்னணி அணிகளை வைத்து பார்க்கும் பொழுது, இந்திய அணி இதுவரையில் ஒரு அணியாக திரளவே இல்லை. யார் யார் அணியில் இருப்பார்கள் என்பது குறித்து ஒரு தெளிவான விபரங்கள் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் வெல்வது கடினம் என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது இந்திய அணிக்கு ஆசிய கோப்பை தொடரும் அதற்கடுத்து இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மட்டும் கையில் இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களில் இந்திய அணி தமக்கு தேவையான விஷயங்களை தீர்த்துக் கொள்ளாவிட்டால் பெரிய பிரச்சினையாகத்தான் அமையும்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் ” விராட் கோலியை கேப்டனாக தொடர விட்டிருந்தால், இந்நேரம் இந்தியா அணி உலக கோப்பைக்கு 100% தயாராக இருந்திருக்கும். இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை பரிசோதித்து உள்ளது. நான் அவர்களது பேட்டிங் பற்றி பேசினார் நான்காவது இடத்தில் ஆரம்பித்து ஏழாவது இடம் வரை அவர்கள் அடிக்கடி செய்த பரிசோதனை முயற்சிகள் யாரையும் நிரந்தர வீரராக நிறுத்த விடவில்லை. ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து திரும்பி வருவதால் இது ஆபத்தானது என்கிறேன்.

- Advertisement -

பவர் ஹிட் என்ற வகையில் ஆசிய அணிகள் இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக போராட வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் போட்டிகளிலும் ஸ்டிரைக் ரேட் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இந்த மூன்று அணிகளிடமும் ஆசிய அணிகள் போராட வேண்டி இருக்கும். அவர்கள் தற்சமயத்தில் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் , ஸ்விட்ச் ஹிட் போன்றவைகளை பயன்படுத்துகிறார்கள். இதெல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு ஆபத்தான ஒன்றாக இருக்கிறது.

இங்கிலாந்தின் ஆதில் ரசித் மற்றும் மொயின் அலி போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கட்டுக்கு வருகிறார்கள். அதே சமயம் எங்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் சிக்கனமாக இருப்பதற்கு பார்க்கிறார்கள். இது கடுமையான போட்டி இருக்கும் ஒரு உலகக்கோப்பையாக இருக்கும். இந்த விஷயத்தில் ஆசிய அணிகள் அதிகம் எட்ஜ் ஆவதை நான் பார்க்கவில்லை!” என்று கூறியிருக்கிறார்!