இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மேற்கொண்டு 97 ரன்கள் எடுத்தால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைப்பார்.
முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் அவர் அதே போட்டியில் ஐந்து கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட காரணத்தினால் இந்திய அணி போட்டியை தோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன் காரணமாக அவருடைய சதத்திற்கான மதிப்பு இல்லாமல் போய்விட்டது.
ஜெய்ஸ்வாலை ஆதரிக்க வேண்டும்
இந்த நிலையில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரரான ஜெய்ஸ்வால் ஒரு போட்டியில் செய்த தவறுக்காக அவரை மோசமாக விமர்சிக்க கூடாது என இந்திய முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் சீக்கிரத்தில் ஜெய்ஸ்வால் சிறப்பாக திரும்பி வருவார் என்றும் கூறியிருக்கிறார்.
இப்படியான சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெறும் என்றால், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விட்ட கேட்ச் வாய்ப்புகள் ரசிகர்களால் மறக்கப்படும். மேலும் மீதி இருக்கும் போட்டிகளுக்கு அவர் தன்னம்பிக்கையுடன் வர முடியும்.
97 ரன்னில் மெகா சாதனை
தற்போது 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால் 1903 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 97 ரன்கள் எடுத்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த கவாஸ்கரின் 49 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார். கவாஸ்கர் 23 போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்திருக்கிறார். அதே சமயத்தில் டான் பிராட்மேன் 15 டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2வது டெஸ்ட்.. இந்திய பயிற்சி முகாமில் சோகம்.. கம்பீர் 2 வீரர்களுடன் ஆலோசனை.. சிராஜ் செய்த காரியம்
இந்திய அணிக்கு அதிவேகமாக 2000 டெஸ்ட் ரன்கள்
சுனில் கவாஸ்கர்-23
கௌதம் கம்பீர் -24
ராகுல் டிராவிட்-25
வீரேந்திர சேவாக் -25
விஜய் ஹசாரே-26
சேதேஷ்வர் புஜாரா -26
சௌரவ் கங்குலி -27
ஷிகர் தவான்-28
பட்டோடி -28
அஜிங்க்யா ரஹானே-29






