என்னோட ஆர்க்ல போட்டா, பால் பார்க்ல போய் தான் விழும் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி!

0
1310

இந்த ஸ்கோரை கடைசி ஓவர் வரை எடுத்துச்செல்ல வேண்டாம். முன்னரே பினிஷ் செய்யலாம் என்று அதிரடியாக விளையாடினோம் என பேசினார் ஆட்டநாயகன் இஷான் கிஷன்.

லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. லிவிங்ஸ்டன் கிட்டத்தட்ட 82(42) ரன்கள் மற்றும் ஜித்தேஷ் சர்மா 49(27) ரன்கள் விளாசி கொடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்ஸ் மட்டுமே விட்டு, 214 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா விரைவாக ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். மறுபக்கம் சூரியகுமார் யாதவ் தனது பங்கிற்கு 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். மூன்றாவது விக்கெட்டிற்கு இஷான்-சூர்யகுமார் ஜோடி 116 ரன்கள் குவித்தது.

இவர்கள் இருவரும் வெளியேறியபிறகு, கடைசியில் வந்து டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் போட்டியை பினிஷ் செய்து கொடுத்தனர். 18.5 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

41 பந்துகளில் 75 ரன்கள் குவித்த இஷான் கிஷன் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இஷான் கிஷன் பேசியதாவது: “இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. 20 ஓவர்கள் கீப்பிங் செய்தபோது, பந்துவீச்சிற்கு பிட்ச் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்.

- Advertisement -

என்னுடைய ஆர்கில் பந்தை வீசினால் கட்டாயம் நான் பார்க்கில் தூக்கி அடிக்க பார்ப்பேன். ஆரம்பத்தில் ரிஷி தவான் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். அப்போது கீப்பர் ஸ்டம்ப் அருகில் இல்லை என்பதை பார்த்த பிறகு இறங்கி அடிக்க முற்பட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டேன். அவசரம் வேண்டாம பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்று எனக்கு வெளியில் இருந்து மெசேஜ் கொடுத்தார்கள். அதற்கேற்றவாறு துவக்கத்தில் சில ஓவர்கள் பொறுமையுடன் இருந்தேன்.

215 ரன்கள் சேஸ் செய்யும் பொழுது ஃபீல்டர்கள் எங்கே இருக்கிறார் இல்லை என்பதை போதுமானவரை பார்க்க வேண்டிய தேவை இருக்காது. உங்களுடைய சரியான ஏரியாவில் பந்து வீசப்பட்டால் தைரியமாக தூக்கி அடிக்கலாம் மைதானமும் அதற்கு ஏற்றவாறு தான் இருந்தது.

கடந்த போட்டியில் கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று ஆட்டத்தை முடித்தோம். ஆனால் இம்முறை அதற்கு முன்னரே பினிஷ் செய்ய வேண்டும் என்று முற்பட்டோம். அதனால்தான் மிடில் ஓவரிலும் விரைவாக ரன்க்குவித்து வந்தோம்.

நன்றாக உடல்தகுதியை வைத்திருக்க வேண்டும். அதற்கேற்றவாறு ஜிம் டிரைனிங் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். என்னுடைய தாய்க்கும் இந்த நேரத்தில் நன்றியை கூற வேண்டும். அவர்கள் எனக்கு ஆரோக்கியமான உணவை கொடுத்தார்கள். நான் சரியாக சாப்பிடுகிறேனா என்பதை உறுதியும் செய்தார்கள்.” என்றார்.