3வது போட்டி டிரா.. சிக்கலில் இருக்கும் இந்திய அணி.. என்ன செய்தால் WTC பைனலுக்கு தகுதி பெறலாம்.. முழு விபரம்

0
1211

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் ஐந்தாவது நாள் ஆட்டமும் தடைபட்ட நிலையில் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டி சமனில் முடிந்ததால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

- Advertisement -

டிராவில் முடிவடைந்த மூன்றாவது டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மேலும் இந்த போட்டியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டியானது இரண்டு அணிகளுக்கும் இடையே வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்துள்ளது.

இதனால் கடந்த இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்ற நிலையில் மூன்றாவது முறையும் அதேபோல தகுதி பெறுமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சற்று சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு

அதாவது அடுத்த இரண்டு போட்டிகள் மெல்போர்ன் மற்றும் சிட்னி மைதானங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 55.88 ஆக இருக்கும் நிலையில் 60.52 ஆக உயரும். அப்படி உயர்ந்தால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தது நடைபெற உள்ள இலங்கைத் தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் இந்தியாவை தாண்ட முடியாது.

இதையும் படிங்க:பாகிஸ்தான் டெஸ்ட்.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. 2 அறிமுகம்.. இந்திய அணிக்கு சிக்கல்

ஒருவேளை இந்திய அணி ஒரு போட்டி டிரா, ஒரு போட்டி வெற்றி என முடித்தால் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையாவது டிரா செய்ய வேண்டும். ஒருவேளை இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோற்றால் இலங்கை ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும். மேலும் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோற்றால் இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு வெற்றியோடு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம். எனவே இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முடிவின் அடிப்படையில் இறுதிப் போட்டியாளர் தீர்மானிக்கப்படுவார்கள்.

- Advertisement -