பாகிஸ்தான் டெஸ்ட்.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. 2 அறிமுகம்.. இந்திய அணிக்கு சிக்கல்

0
865

தென் ஆபிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வருவதற்கு மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோத இருக்கிறது. இதற்காக 16 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் அணி தற்பொழுது 3 வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் இறுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டி அட்டவணை

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக கிறிஸ்துமஸ் முடிந்து மறுநாள் டிசம்பர் 26 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி புத்தாண்டு டெஸ்ட் போட்டியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ஆரம்பிக்கிறது.

தென் ஆபிரிக்கா அணி தங்களது சொந்த மண்ணில் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியை வென்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும் அல்லது இரண்டு போட்டியிலும் டிரா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2 முக்கிய அறிமுகங்கள்

இந்த டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக தொடர்கிறார். மேலும் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மபாக மற்றும் கார்பின் போஸ் ஆகியோர் முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகிறார்கள். ஜெரால்டு கோட்சி இந்த தொடரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 83 ரன் 10 விக்கெட்.. சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் சோகம்.. பங்களாதேஷ் அணி டி20 தொடரை கைப்பற்றியது

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி :

டெம்பா பவுமா (கே), டேவிட் பெடிங்ஹாம், கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், குவேனா மபாகா, ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன் மற்றும் வெர்ரின்னே.

- Advertisement -