கிஷான், ராகுல் தேவையில்லை ; ரிஷப் பண்ட்டை ஓப்பனராக விளையாட வையுங்கள் – சஞ்சய் பங்கர் அதிரடிக் கருத்து

0
137
Rishabh Pant and Sanjay Bangar

நவீன கிரிக்கெட் காலத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் மிகச்சிறந்த துவக்க ஜோடி என்றால், வலக்கை பேட்ஸ்மேன் சச்சின், இடக்கை பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி ஜோடிதான். இந்தத் துவக்க ஜோடி இந்தியளவில் மட்டுமல்லாது, உலகளவிலும் மிகச்சிறப்பான தொடக்க ஜோடியாகவே கோலோச்சியது!

வலக்கை, இடக்கை, சச்சின்-சவுரவ் ஜோடி இந்திய அணிக்காக 176 போட்டிகளில் 8227 ரன்களை குவித்துள்ளது. இதில் 26 சதங்களும், 29 அரைசதங்களும் பார்ட்னர்ஷிப்பாக வந்திருக்கிறது. ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக இருவரும் இணைந்து 258 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் இந்திய அணிக்கு இதற்குப் பிறகு சிறந்த ஒரு வலக்கை, இடக்கை துவக்க ஜோடி அமையாமலே இருந்தது. சவுரவ் ஓய்வுபெற சச்சின்-சேவாக் வலக்கை ஜோடி இந்திய அணிக்காகத் துவக்கம் தர ஆரம்பித்தது. இந்த ஜோடியுமே இந்திய அணிக்கு வெற்றிக்கரமாகச் செயல்பட்டது. ஆனால் ஒரு பந்துவீச்சாளர் எடுத்ததும் வலக்கை-இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு மாறிமாறி பந்துவீசுவது என்பது சிரமமான விசயமாகும். இதற்காகவே வலக்கை-இடங்கோ ஜோடியை எல்லா அணிகளுமே விரும்புகின்றன.

இந்த நிலையில் வலக்கை பேட்ஸ்மேன் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரராக வர, துவக்க ஆட்டக்காரராகவே வந்த வலக்கை பேட்ஸ்மேன் ஷிகர்தவான் இருவரும் துவக்கம் தர ஆரம்பித்தார்கள். ஷிகர் தவான் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆடும் வரை இந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட, இந்தப் பிரச்சினை தொடர ஆரம்பித்துவிட்டது.

தற்போது இடக்கை வீரர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கிஷான் கிஷானை இந்திய அணி நிர்வாகம் டி20 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக வாய்ப்புக் கொடுத்து வருகிறது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் மாற்று துவக்க ஆட்டக்காரராக வலக்கை பேட்ஸ்மேன் ருதுராஜை வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் “இந்திய அணி நிர்வாகம் பேட்டிங்கில் துவக்க இடத்திற்கு நீண்ட நாட்களுக்கான வலக்கை-இடக்கை ஜோடியை விரும்பினால், ரிஷாப் பண்ட்டை துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்கலாம்” என்று கூறியிருக்கிறார். ரிஷாப் பண்ட் உள்ளூர் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!