இந்திய கிரிக்கெட்

2025 சாம்பியன்ஸ் டிராபி..இந்தியா புறக்கணிக்க முடியுமா?.. அப்படி செய்தால் யாருக்கு வாய்ப்பு.. – முழு தகவல்கள்

அடுத்த வருடம் 2015-ல் பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி நடக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் இன்னும் குழப்பமான சூழ்நிலைகள் அரசியல் காரணங்களால் நிலவி வருகிறது. தற்போது இந்திய அணி பங்குபெறாவிட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபிக்கு மொத்தம் எட்டு அணிகள் கொண்டு நடத்தப்படும். இதற்கான எட்டு அணிகள் கடைசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளாக இருக்கும். மேலும் எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ அந்த நாடு தாமாகவே தகுதியைப் பெற்று விடும்.

ஒருவேளை ஒன்பதாவது இடத்தில் இருக்கும் நாடு போட்டியை நடத்தினால், எட்டாவது இடத்தை பிடித்த நாடு வெளியேறிவிடும். போட்டியை நடத்துகின்ற காரணத்தினால் ஒன்பதாவது இடத்தை பிடித்த நாடு விளையாடும் தகுதியை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடம் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் வந்து விளையாட முடியாது என்றும், இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் இலங்கை அல்லது துபாயில் நடத்த வேண்டும் என்று கேட்டு வருகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானில் வரவைத்து விளையாட வைக்க மிகவும் விருப்பப்படுகிறது. அவர்களுடைய எதிர்கால கிரிக்கெட் வளர்ச்சிக்கு இதன் மூலம் கிடைக்கும் பணம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே பாகிஸ்தான் கடைசி வரையில் இந்திய அணி அவர்கள் நாட்டுக்கு வருவதற்காகத்தான் பேச்சுவார்த்தைகளை நடத்தும்.

இந்திய அணி ஐசிசி நடத்தும் சாம்பியன் டிராபியை புறக்கணிக்க முடியுமா? என்றால் முடியும். ஆஸ்திரேலியா அணி ஐசிசி உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே புறக்கணித்து இருக்கிறது. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட போட்டியை மட்டும் புறக்கணித்தார்கள். ஆனால் இந்தியா விரும்பினால் மொத்த தொடரில் இருந்தும் கூட விலகிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : கட்டாய ஓய்வுக்கு பின்பும்.. இங்கிலாந்து அணிக்காக ஆண்டர்சன் செய்த செயல்.. கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்த சூழ்நிலையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதில் இருந்து விலகிக் கொள்ளும் என்றால், கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஒன்பதாவது இடத்தை பிடித்த இலங்கை அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் இந்திய அணி விளையாடாவிட்டால், நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியடைவது கடினம். ஐசிசிக்கு பெரிய இழப்பு உண்டாகும். மேலும் அந்த இழப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்க இருக்கும் லாபத்தில் பெரிய சரிவை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts