கட்டாய ஓய்வுக்கு பின்பும்.. இங்கிலாந்து அணிக்காக ஆண்டர்சன் செய்த செயல்.. கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
401
Anderson

நேற்று இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் சாதனை வேகப்பந்துவீச்சாளர் 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார். அவரை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்தது என்பது வெளிப்படையாக தெரிந்தது. ஆனாலும் கூட தொடர்ந்து அணி உடன் இருந்து உதவப் போவதாக கூறி நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை படைத்தார். மேலும் 42 வயதில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக பெரிய அணிக்கு தொடர்ந்ததும் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதைத் தாண்டி அவர் ஸ்விங்கை கட்டுப்படுத்தி கையாண்ட விதத்தில் மேதையாக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டு இருக்கும் வரையில் அவருடைய பெயர் கிரிக்கெட் வரலாற்றின் தனிப் பக்கங்களில் இருக்கும். இந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய கௌரவ அடையாளமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்படியான சிறப்புடன் இருந்த போதிலும் கூட, அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் மற்றும் அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ மூவரும் ஆண்டர்சனை ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து ஓய்வு பெற கட்டாயப்படுத்தினார்கள் என்பதை ஆண்டர்சனே வெளியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் அவர் ஓய்வு பெற்றாலும் கூட நேற்று நாசர் ஹுசைன் இடம் பேட்டி அளித்த பொழுது “நான் இங்கிலாந்து அணி உடன் இந்த கோடைக்காலம் முழுவதும் இருக்கப் போகிறேன். என்னால் முடிந்தவரை இங்கிலாந்து பந்துவீச்சு குழுவுக்கு உதவுவதற்கு முடிவுசெய்திருக்கிறேன். அதற்குப் பிறகு வாழ்க்கை எங்கு செல்கிறது என்பதை பற்றி நான் நீண்ட தூரம் சிந்திக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நேர்ல பார்த்து இருக்கேன்.. கம்பீர் கம்மியா பேசுவார்.. ஆனா அந்த 2 விஷயத்தை கட்டாயம் செய்வார் – ஆவேஷ் கான் பேட்டி

தன்னைக் கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்திருந்தாலும் கூட, அதை தனிப்பட்ட முறையில் ஹோட்டலில் அழைத்துக் கூறியதால் அதையும் மன்னித்துவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், அத்தோடு தனது பெருந்தன்மையை நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கோடைக்காலம் முழுவதும் பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட முடிவு செய்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களை தாண்டி பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது!

- Advertisement -