“நான் பயிற்சியாளராக இருந்தால்.. விராட் கோலிக்கு இதைத்தான் சொல்லுவேன்” – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
779
Virat

2024 ஜூன் மாதம் மத்தியில் டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கி ஜூலை மாதம் வரையில் நடைபெற இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை வடிவமைக்கும் பொருட்டு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய டி20 அணிக்கு அழைத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. இதன் காரணமாக இதற்கு அடுத்து மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங்கில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்.

மேலும் விராட் கோலி துவக்க வீரராக வந்து டி20 வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு துவக்க வீரராக களம் இறங்குகிறார்.

எனவே கிரிக்கெட் வல்லுனர்கள் தாண்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் துவக்க வீரராக வருவது நல்லது என்று நினைக்கிறார்கள். மேலும் சுழற் பந்துவீச்சில் அவர் மூன்றாவது நிலையில் களம் இறங்கி அதிரடியாக ஆட முடியாது என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் தன்னுடைய கருத்தை கூறும் பொழுது “எனக்கு இதில் வித்தியாசமான கருத்து இருக்கிறது. எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய பொழுது, மூன்றாவது வீரராக விராட் கோலி வருவது தான் எங்களை அச்சப்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. அவர் அணியின் நடுவில் இருக்கும் பசை போல நான் உணர்ந்தேன்.

மேலும் மூன்றாம் இடம் என்பது மிடில் ஆர்டர் கிடையாது அது டாப் ஆர்டர். அந்த இடத்தில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர். மேலும் அவர் மிடில் ஆர்டர் உடன் இணைந்து பலமுறை விளையாடுகிறார். இது மட்டுமில்லாமல் அவர் கடைசி கட்டத்தில் வரக்கூடிய வீரர்களையும் வைத்துக் கொண்டு விளையாடுவார். மேலும் கடைசியில் வரக்கூடிய பவர் ஹிட்டர்களை சுதந்திரமாக அவர் விளையாட விடுவார்.

பெங்களூர் அணிக்காக நாங்கள் ஐபிஎல் தொடரில் ஒன்றாக விளையாடிய பொழுது கூட, துவக்க வீரராக அவர் களமிறங்குவது குறித்து நான் நிறைய அவருடன் ஆலோசனை செய்திருக்கிறேன். ஆனால் அவரது விரும்புகிறார். அது அவருடைய விருப்பம் என்று நான் நினைக்கிறேன்.

ஒருவேளை நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால், விராட் கோலி துவக்க வீரராக விளையாட விரும்பினால், அவரிடம் நான் ‘ நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் போய் ஓபன் செய்யுங்கள். நீங்கள் சிறந்த வீரர் உலகக் கோப்பையை வெல்லுங்கள்” என்று சொல்லுவேன் என்று கூறி இருக்கிறார்.