நான் எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா இந்த தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம் – மும்பை கேப்டன் ரோஹித் சர்மா!

0
5752
Rohit sharma

இன்று ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பாக 10 போட்டிகளில் 11 புள்ளிகளை சென்னை அணியும், ஒன்பது போட்டிகளில் 10 புள்ளிகளை மும்பை அணியும் பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் வெல்லக்கூடிய அணி நேராக இரண்டாவது இடத்திற்கு செல்லும் என்கின்ற நிலை இருந்தது. மேலும் சென்னை அணியை விட ஒரு ஆட்டம் குறைவாக விளையாடியிருந்த மும்பை அணி இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு மிகப் பிரகாசமான வாய்ப்பு உருவாகும் என்ற நிலையில் இருந்தது.

நிலைமைகள் இப்படி இருக்க இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியை 139 ரன்களுக்கு அபாரமாக பந்து வீச்சில் செயல்பட்டுக் கட்டுப்படுத்தியது சென்னை அணி.

இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி இலக்கை 17.4 ஓவர்களில் எட்டி அசத்தி, பதினொன்றாவது போட்டியில் ஆறாவது வெற்றியைப் பெற்று 13 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

- Advertisement -

தோல்விக்குப்பின் போட்டி குறித்து பேசி உள்ள கேப்டன் ரோஹித் சர்மா “என்ன தவறு நடந்தது என்று நான் எல்லா இடங்களையும் யூகித்து பார்க்கிறேன். எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. ஒரு பேட்டிங் யூனிட் ஆக எங்களுக்கு இது மோசமான நாள்.

நான் மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு காரணம் திலக் விளையாட முடியாததுதான். மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மெண்ட்கள் வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் பவர் பிளேவிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

பியூஸ் சாவ்லா நன்றாகப் பந்து வீசுகிறார். மற்றவர்கள் அவரைச் சுற்றி செயல்பட வேண்டும். நாங்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம். இது ஒரு குழு விளையாட்டு. ஆனால் நாம் நிறைய கற்றல்களை எடுத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியும்.

வெளிப்படையாக இந்த ஆண்டு ஹோம் கிரவுண்டுகளில் எந்த அட்வான்டேஜும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். அடுத்த இரண்டு ஹோம் ஆட்டங்கள் முக்கியமானது. திரும்பி வர நன்றாக செயல்பட்டே ஆகவேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!