“நான் மட்டும் பந்து வீசி இருந்தால் 40 ரன்னை தாண்டி இருக்க மாட்டாங்க” – விராட் கோலி அதிரடி பேட்டி!

0
2840

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அறுபதாவது போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான அணிகள் ஜெய்ப்பூரில் மோதின . இந்தப் போட்டியில் நூத்தி பன்னிரண்டு ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது பெங்களூர் அணி . இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு எட்டும் தூரத்தில் இருக்கிறது .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் 171 ரகளை எடுத்தது . அதனைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 59 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் 58 ரணங்களில் ஆல் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினர் . அந்த அணியை சார்ந்த தென்னாப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் வெயின் பர்னல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் . கரண் ஷர்மா மற்றும் பிரேஸ்வெல் இரண்டு விக்கெட்டுகளையும் கோமதி சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .

இந்த வெற்றி பெங்களூர் அணியின் ரன் ரேட் உயர்வதற்கு அந்த அணிக்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது . இந்நிலையில் ஆர் சி பி அணியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி ராஜஸ்தான் அணி தப்பிவிட்டது என தெரிவித்திருக்கிறார் . தங்களது அணியின் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பினை வெகுவாக பாராட்டி இருக்கும் அவர் தனது பந்து வீச்சு பற்றியும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .

இது குறித்து பேசி இருக்கும் விராட் கோலி ” ராஜஸ்தான் அணிக்கு நல்ல நேரம் நான் நேற்று பந்து வீசவில்லை . நான் மட்டும் பந்து வீசி இருந்தால் அவர்கள் 40 ரன்கள் கூட தாண்டி இருக்க மாட்டார்கள் இன்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார் . இந்தக் கருத்து அவரது ரசிகர்களிடம் வெகுவாக ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது . விராட் கோலியின் தன்னம்பிக்கையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

- Advertisement -

கடந்த 16 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் விராட் கோலி அந்த அணி ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என கடுமையாக போராடி வருகிறார் . கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி தொகுதி பெற்றது. ஆனால் பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது .

இந்த முறை துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி தொடரின் இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது . இதனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற அச்சம் அதன் ரசிகர்களிடமிருந்தது . நேற்றைய போட்டியில் அவர்கள் பெற்ற வெற்றி பெங்களூர் அணி வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது .